தனது 19 வயதில் இருந்து இந்திய அணிக்காக ஆடி வரும் யுவராஜ் சிங், ஏன் இன்னும் தாகம் தீராமல் அணியில் இடம் இந்திய பிடிக்க ஓடி வருகிறார்? ஒரு டி20 உலகக்கோப்பை, ஒரு 50 ஓவர் உலகக்கோப்பை வென்றாகிவிட்டது, இன்னும் என்ன ஆசை அவரிடம் உள்ளது என புரியாத புதிராக உள்ளது. ஆனால், அணியில் எப்படியாவது இடம் பிடித்து விட வேண்டும் என்ற போர்குணம் அவரை விட மறுக்கிறது. இதனால் மீண்டும் மீண்டும் அணியில் முட்டி மோதியாவது உடம் பிடிக்க முயற்சி செய்து வருகிறார்.
இதுவரை 40 டெஸ்ட் போட்டிகளில் ஆடி, 33.93 சராசரியில் 1900 ரன் அடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 9 விக்கெட்டும் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளைப் போல அல்லாமல் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஒரு வெற்றி வீரனாக இவ்வளவு வருடம் வலம் வந்துகொண்டு இருந்தார்.
2002ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான நாட்வெஸ்ட் டிராபியை முகமது கைப் உடன் இணைந்து வாங்கி தந்தார் யுவராஜ் சிங். அது மட்டும் இல்லாமல் 2007ஆம் ஆண்டு ஸ்டுவர்ட் பிராட் ஓவரில் ஆறு பந்தில் ஆறு சிக்ஸர்கள் ஐந்து உலகசாதனை படைத்தார். அதன் பிறகு 2011 உலகக்கோப்பையில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு, இந்திய அணிக்கு கோப்பையை வாங்கி தந்த யுவராஜ் சிங் தொடர் நாயகன் விருதையும் பெற்றார்.
இந்நிலையில், டிசம்பர் 12, 2017 அன்று தன்னுடைய 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் யுவராஜ் சிங். அவருக்கு கிரிக்கெட் நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.