என்னை திட்டாதீங்க ப்ளீஸ்.. வேணும்னே அஸ்வின் ஓபனிங் பண்ணவைக்கல.. இதான் காரணம்! – சஞ்சு சாம்சன் விளக்கம்!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஜோஸ் பட்லருக்கு பதிலாக அஸ்வினை ஓப்பனிங் இறங்க வைத்ததற்கு என்ன காரணம் என்று சஞ்சு சாம்சன் விளக்கம் அளித்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல் ராயல்ஸ் அணிகள் மோதிய இந்த சீசனின் எட்டாவது லீக் போட்டி கௌகாத்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு துவக்க வீரர்கள் இருவரும் அபாரமாக விளையாடினர்

பிரப்சிம்ரன் 60 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். கேப்டன் ஷிக்கர் தவான் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று 56 பந்துகளில் 86 ரன்கள் விளாசினார். 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 197 ரன்கள் அடித்தது.

அதைத்தொடர்ந்து 198 ரன்கள் இலக்கை சேஸ் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வழக்கமான துவக்க வீரர்களாக யஷஷ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் களமிறங்கினர். ஆனால் நேற்றைய தினம் ஜோஸ் பட்லர் ஓபனிங் செய்யவில்லை. யாரும் எதிர்பாராத வகையில் அஸ்வின் ஓப்பனிங் இறங்கினார்.

பின்னர் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் சிம்ரன் ஹெட்மயர் ஆகியோர் சிறப்பாக விளையாடியபோதும், 20 ஓவர்கள் முடிவில் 192 ரன்கள் மட்டுமே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிய அடிக்க முடிந்தது. ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

பட்லர் ஓபனிங் செய்யவில்லை என்பதே இந்த தோல்விக்கு காரணமாக பார்க்கப்பட்டது. ஏன் ஓபனிங் இறங்கவில்லை என  கேள்விகள் எழுப்பப்பட்டது.

போட்டி முடிந்தபிறகு ஜோஸ் பட்லர் ஏன் ஓப்பனிங் செய்யவில்லை? அஸ்வின் எதற்க்காக ஓபனிங் செய்தார்? என்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த சஞ்சு சாம்சன் கூறுகையில்,

“ஃபீல்டிங் செய்து கொண்டிருக்கையில் கேட்ச் எடுத்தபோது, ஜோஸ் பட்லர் விரலில் காயம் ஏற்பட்டிருக்கிறது. அதற்காக தையல் போடப்பட்டிருக்கிறது. இதற்கு தாமதம் ஆனதால் அஸ்வின் உள்ளே இறக்கிவிடப்பட்டார்.

இப்போது பட்லர் உடல்தகுதியுடன் இல்லை. இது அணிக்கு சற்று பின்னடைவாகவே தெரிகிறது. அடுத்தடுத்த போட்டிகளில் அவருக்கு குணமடைந்து விடுமா? இல்லை ஓரிரு போட்டிகள் வெளியில் அமர்த்தப்பட வாய்ப்புகள் உள்ளதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.” என்று சஞ்சு சாம்சன் தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.