உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தவிர்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு வருகிற ஜூன் மாதம் 18ஆம் தேதி தொடங்கப்பட்டு 23ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரிட்சை மேற்கொள்ள உள்ளனர். இந்தியா சார்பாக விளையாடும் அணி பட்டியலை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. இதில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஹர்திக் பாண்டியா இடம்பெறவில்லை.
ஹர்திக் பாண்டியா இடம்பெறாதது அனைத்து ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும் ஐபிஎல் தொடரில் நன்றாக தான் அவர் விளையாடினார் அவர் நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் வேளையில் அவரை ஏன் சேர்க்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு பிசிசிஐ சார்பாக ஒரு விளக்கம் தரப்பட்டுள்ளது.
பேட்ஸ்மேனாக அவரைத் தேர்ந்தெடுத்து முடியாது
2019ஆம் ஆண்டு ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக அறுவை சிகிச்சையை மேற்கொண்டு சுமார் இரண்டு ஆண்டுகள் ஓய்வு எடுத்தார். அவர் கடைசியாக டெஸ்ட் போட்டிகள் விளையாடியது 2018ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராகவே. அதற்குப் பின்னர் தற்பொழுது வரை அவர் எந்தவித டெஸ்ட் போட்டிகளிலும் கலந்து கொள்ளவில்லை.
மேலும் இறுதிப் போட்டியில் அவர் ஒருவேளை அணியில் சேர்க்கப்பட்டால் பேட்டிங் மட்டுமே செய்வார். ஏனென்றால் அவரால் இன்னும் பவுலிங் செய்ய முடியவில்லை. உடல் பரிசோதனையில் அவர் இன்னும் ஒரு சில காலம் பந்துவீச காத்திருக்க வேண்டும் என்று முடிவுகள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் ஒரு பேட்ஸ்மேனாக அவரை அணியில் சேர்த்துக் கொள்ள இயலாது. எனவேதான் அவர் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்று பிசிசிஐ சார்பாக விளக்கம் தெரிவித்துள்ளனர்.
டெஸ்ட் போட்டிகளில் ஹர்திக் பாண்டியா
2017 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை மொத்தமாக பதினொரு டெஸ்ட் போட்டிகளில் ஹர்திக் பாண்டியா விளையாடி இருக்கிறார். அந்த 11 போட்டிகளில் மொத்தமாக இவர் 132 ரன்கள் குவித்திருக்கிறார். டெஸ்ட் போட்டியில் இவரது பேட்டிங் அவரேஜ் 31.3 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 73.9 ஆகும்.அதேபோல பவுலிங்கில் மொத்தமாக 17 விக்கெட்டுகளை இவர் கைப்பற்றியிருக்கிறார் பவுலிங்கை பொறுத்தவரையில் இவரது எக்கானமி 3.38.
டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரையில் ஒரு மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்டியா என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் அவரால் பௌலிங் வீச முடியாது. எனவேதான் பிசிசிஐ அவரை புறக்கணித்துள்ளது. மேலும் மீண்டும் அவர் பழைய உடற்தகுதியுடன் திரும்பும் வேளையில், மறுபடியும் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் நிச்சயம் விளையாடுவார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.