நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகளில் விளையாடி வருகிறது, இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 2-0 என முன்னணியில் உள்ளது.
இன்று நடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான டி20 போட்டி நியூசிலாந்தில் உள்ள தண்டில் மாகாணத்தில் உள்ள யுனிவர்சிட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பீல்டிங் தேர்வு செய்தார்.
தொடக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது,நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் மார்டின் குப்டில் 9 பந்துகளுக்கு 97 ரன்கள் அடித்து அசத்தினார் அதில் 8 சிக்ஸ்களும், 6 ஃபோர்களும் அடங்கும். மேலும் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 35 பந்துகளுக்கு 53 ரன்கள் அடித்து அசத்தினார்.
இந்த கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி சற்று திணறியது, இதில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் வெறும் 12 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார், பின் இதனை தொடர்ந்து வந்த ஒவ்வொரு வீரர்களும் தனது விக்கெட்டை இழந்தனர் பின் மிக சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்த மார்க்க ஸ்டாய்நிஸ் டேனியல்ஸ் கேம்ஸ் அணியை சிக்கலில் இருந்து மீட்டனர், இருந்தபோதும் நியூசிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, ஆஸ்திரேலிய அணி சார்பில் மார்க்கஸ் ஸ்டாய்நிஸ் 37 பந்துகளுக்கு 78 ரன்கள் அடித்து அசத்தினார். மேலும் டேனியல் சாம்ஸ் 15 பந்துகளில் 45 ரன்கள் அடித்து ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு பக்கபலமாக திகழ்ந்தார்.
இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் சரியாக விளையாடாததால் அவர் மீது கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் ஆரோன் பின்ச் பற்றி ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மார்க்கஸ் ஸ்டாய்நிஸ் தெரிவித்ததாவது, டி20 போட்டிகளில் ஆரோன் பின்ச் ஒரு தலை சிறந்த பேட்ஸ்மேன் ஆவார், இவர் களம் இறங்கும் பொழுது எங்களுக்கு இவர் மேல் மிகப் பெரும் நம்பிக்கை ஏற்படும் என்று கூறினார்,இவர் கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளை படைத்துள்ளார் மேலும் இவர் தான் எங்களுடைய கேப்டன் நாங்கள் அவரை நம்புகிறோம் என்று மார்க்க ஸ்டாய்நிலிஸ் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது இவர் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றாலும் ஒருநாள் போட்டிகளில் மிக சிறப்பாக செயல்பட்டு அடுத்தடுத்த சதங்களை அடித்தார் இவர் மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் களம் இறங்குவார் என்று தெரிவித்தார்.
ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியில் இருந்து நீக்கப்பட்ட ஆரோன் பின்ச்சை 2021 கானா ஐபிஎல் போட்டியில் எந்த ஒரு அணியும் தேர்ந்து எடுக்காதது குறிப்பிடத்தக்கது.