இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்ட கே.எல் ராகுல்… மும்பை இந்தியன்ஸிற்கு ஆப்பு உறுதி; எச்சரிக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் !!

இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்ட கே.எல் ராகுல்… மும்பை இந்தியன்ஸிற்கு ஆப்பு உறுதி; எச்சரிக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் கே.எல் ராகுலின் பெயர் இடம்பெறாதது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜுன் மாதம் 2ம் தேதி துவங்க  உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வைத்து டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில், டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., அறிவித்தது.

டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், சாஹல் போன்ற வீரர்களுக்கு மீண்டும் இடம் கொடுக்கப்பட்டாலும், கடந்த இரண்டு உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்பட்ட கே.எல் ராகுலின் பெயர் எதிர்வரும் டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை.

இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலமாக கருதப்படும் ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டதோடு, நடப்பு ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு வருவதாலும், தன்னை புறக்கணிக்க சிறு காரணம் கூட சொல்ல முடியாத அளவிற்கு சஞ்சு சாம்சன் தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருவதாலும் கே.எல் ராகுலை விட ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சனுக்கு ஆகியோருக்கு பிசிசிஐ., முன்னுரிமை கொடுத்துள்ளதாக தெரிகிறது.

இந்தநிலையில், டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கே.எல் ராகுல் இடம்பெறாதது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவலையான விமர்ச்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சிலர் கே.எல் ராகுல் அணியில் இருந்து நீக்கப்பட்டது ஏற்புடையது அல்ல என பேசி வருகின்றனர். அதே போன்று மறுபுறம் கே.எல் ராகுலுக்கு இடம் கொடுக்காதது சரியான முடிவு தான் என பேசி வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி, இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள இருப்பதால், கடந்த காலங்கள் அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் போன வீரராக அறியப்பட்ட கே.எல் ராகுல், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் மீண்டும் தனது பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, தனக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காத விரக்தியை வெளிப்படுத்துவார் என்றும் நெட்டிசன்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதில் சில; 

have a feeling kl rahul will play the fastest innings of his life today

— vishal dayama (@VishalDayama) April 30, 2024


டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி;

ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஸ்தீப் சிங், பும்ராஹ், முகமது சிராஜ்.

 

Mohamed:

This website uses cookies.