டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா நிச்சயமாக 400 விக்கெட்டுகள் எடுப்பார்!

டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா நிச்சயமாக 400 விக்கெட்டுகள் எடுப்பார்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் கர்ட்லி ஆம்புரோஸ் ஜஸ்பிரித் பும்ரா நிச்சயமாக டெஸ்ட் போட்டிகளை முடிக்கும் நிலையில் 400 விக்கெட்டுகளை குறைந்தபட்சம் எடுத்திருப்பார் என்று கூறியுள்ளார். ஆம்ரோஸ் டெஸ்ட் போட்டிகளில் 405 விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர்களும் ஒரு தலைசிறந்த வீரர் என்று யாரைக் கேட்டாலும் நிச்சயமாக இவரது பெயரை எல்லோரும் கூறுவார்கள்.

இவர்களே ஆடிய காலகட்டங்களில் இவரது ஆதிக்கம் மிக அதிக அளவில் இருக்கும். பேட்ஸ்மேன்கள் இவரது பந்துகளை சமாளிக்க முடியாமல் திணறியது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அப்பேர்ப்பட்ட ஒருவர் ஜஸ்பிரித் பும்ரா பற்றி கூறியது அனைத்து இந்திய ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஜஸ்பிரித் பும்ரா ஒரு தலை சிறந்த வீரராக வலம் வருவார்

சமீபத்தில் ஆம்ரோஸ் இடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றி விடுவாரா என்று தான். அதற்கு பதில் கூறிய ஆம்புரோஸ் ஜஸ்பிரித் பும்ரா மிக வித்தியாசமாக பந்துவீச கூடிய ஒரு ஆட்டக்காரர். மெதுவாக ஓடி வந்து கிரீஸ் இடம் வந்து தனது முழு வேகத்தை தனது வெளிப்பாட்டில் காட்டி பந்துகளை துல்லியமாக வீசுவார். அவர் வீசுவது மிக விசித்திரமாக இருந்தாலும் அவர் வீசும் விதம் மிகவும் கடினமானது.

கண்டிப்பாக என்னால் அடித்துக் கூற முடியும் அவர் டெஸ்ட் போட்டிகளில் நிச்சயமாக குறைந்தபட்சம் 400 விக்கெட்டுகள் கைப்பற்றி விடுவார். அவர் முழு பாரத்தையும் தனது உடலில் இறக்கி பந்துகளை வீசி வருகிறார். நிச்சயமாக அவ்வளவு எளிதாக அனைவராலும் இவரைப்போல் வீசி விட முடியாது. இவ்வாறு பும்ராவை பற்றி ஆம்ரோஸ் புகழ்ந்து கூறியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா

ஜஸ்பிரித் பும்ரா தற்போது வரை 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா, மொத்தமாக தற்போது வரை 83 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் இவர் மொத்தமாக 160 மெய்டன் ஓவர்களை வீசியுள்ளார். அதேபோல் இவரது பவுலிங் எக்கானமி 2.7 ஆகும் மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 49.3 ஆகும். இவரது சிறந்த பந்துவீச்சு ஒரு போட்டியில் 86 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை கைப்பற்றியதே. டெஸ்ட் போட்டிகளின் பந்து வீச்சாளர்கள் ஐசிசி தரவரிசை பட்டியலில் தற்போது இவர் பதினோராவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Prabhu Soundar:

This website uses cookies.