ஒரே போட்டியில் அதிரடி காட்டி, தோனிக்கே சவால் விட்ட ஹெட்மயர்!

முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சேப்பாக்கம் மைதானத்தில் தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார் விண்டீஸ் வீரர் ஹெட்மயர்.

விண்டீஸ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் குவித்தது.

இலக்கை துரத்திய விண்டீஸ் அணி முதல் விக்கெட்டை இழந்த பிறகு, 3-வது வீரராக களம் இறங்கிய ஹெட்மயர் வானவேடிக்கை நிகழ்த்தினார். இவர் 106 பந்துகளில்  11 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் விளாசி 139 ரன் குவித்தார்.

139 ரன் குவித்ததன் மூலம் ஹெட்மயர் வெற்றிகரமான சேசிங்கில் அதிக ரன் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற புதிய சாதனை படைத்தார். இதற்கு முன்பு 1999-ம் ஆண்டு ரிக்கார்டோ போவெல் 124 ரன் எடுத்தது இதற்க்கு முன்னர் அதிகபட்சமாக இருந்தது. இதனை ஹெட்மயர் முறியடித்தார்.

மேலும் இந்திய மண்ணில் வெற்றிகரமான சேசிங்கில் அதிக ரன் எடுத்தவர்களில் ஹெட்மயர் 2-வது இடத்தை பிடித்தார். முதலிடத்தில், ஜெயசூர்யா 1997-ம் ஆண்டு 151 ரன் குவித்தது உள்ளது.

முதல் ஒருநாள் போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் 139 ரன் குவித்ததன் மூலம் ஹெட்மயர் அதிக ரன் எடுத்து 2-வது இடத்தில் உள்ள தோனியின் சாதனையை சமன் செய்தார்.

முன்னாள் கேப்டன் தோனி 2007-ம் ஆண்டு ஆசிய லெவன் அணிக்காக சேப்பாக்கத்தில் ஆப்பிரிக்க லேவன் அணிக்கு எதிராக 139 ரன் குவித்து இருந்தார். சயீத் அன்வர் 1997-ம் ஆண்டு 194 ரன் குவித்ததே இன்றளவும் சாதனையாக இருக்கிறது.

Prabhu Soundar:

This website uses cookies.