தென்ஆப்பிரிக்கா தொடரில் இசாந்த் சர்மா தனது உண்மையான உத்வேகத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று வெங்கடேஷ் பிராசத் கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் இசாந்த் சர்மா. 29 வயதாகும் இவர் 1.93 மீட்டர் உயரம் கொண்டவர். தனது வேகப்பந்து வீச்சு, பவுன்சர், உயரத்தை பயன்படுத்தி உலக பேட்ஸ்மேன்களை அச்சுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிகப்பெரிய அளவில் இசாந்த் சர்மா சாதித்தது கிடையாது. 10 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடும் இவர், வெளிநாட்டு தொடரில் மட்டும் முக்கிய நபராக விளங்கி வருகிறார்.
இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா தொடரில் இசாந்த் சர்மா உண்மையான உத்வேகத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் கூறியுள்ளார்.
இதுகுறித்து வெங்கடேஷ் பிரசாத் கூறுகையில் ‘‘இசாந்த் சர்மா 10 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சுக்கு தலைமை தாங்க அவருக்கு இது சரியான நேரம். அவர் வேகமாக பந்து வீசக்கூடியவர், நல்ல உயரம், ஆக்ரோஷமானவர். ஆனால், அவர் தனது திறமையை உணறவில்லை.
அவர் ஸ்ரீநாத், ஜாகீர்கான் அல்லது கபில்தேவ் காலத்தில் அவர்கள் எப்படி ஜொலித்தார்களோ அப்படி இசாந்த் சர்மா தன்னுடைய திறமையை வெளிப்படுத்த வேண்டும்’’ என்றார்.