கிரிக்கெட் தொடரில் முதன் முதலில் உருவான டெஸ்ட் போட்டிக்கு என இன்றளவும் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. ஐந்து நாள் நடைபெறும் ஒரு போட்டி யில் எந்த அணி மிக சிறந்த முறையில் விளையாடி அதிக ரன்களை கிடைக்கிறதோ அந்த அணிக்கு பெரும்பாலும் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.
இந்நிலையில் ஒரு தொடரில் ஒரு வீரர் அதிக ரன்கள் எடுப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை ஏனென்றால் ஒரு போட்டியில் அவர் செய்யும் தவறுகளை கணித்து அடுத்த போட்டியில் அவரை எளிதாக வீழ்த்தி விட முடியும் ஆனால் விராட் கோலி இரண்டு முறை டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்து அனைவரையும் வியப்புக்குள்ளாக்கினார் அவைகளைப் பற்றி இங்கு காண்போம்.
விராட் கோலி
இந்தியா vs இங்கிலாந்து (2014)
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் தற்பொழுது இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி அந்த அளவிற்கு சிறப்பாக விளையாடவில்லை. இதனால் அதிக பயிற்சி மற்றும் முயற்சியின் மூலம் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியை பழிதீர்க்க விராட் கோலி காத்துக்கொண்டிருந்தார்.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து அணியை 2016ஆம் ஆண்டு 5 டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அதில் மிக சிறப்பாக எதிர்கொண்டு அடித்து துவம்சம் செய்கிறார். உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களாக கருதப்படும் இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து 2 அரைசதம் ஒரு இரட்டை சதம் இரண்டு சதங்கள் அடித்து சாதனை படைத்தார். அந்த தொடரில் விராட்கோலி 655 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.