எப்படி இந்த இந்திய வீரரால் மட்டும் அனைத்துவித கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட முடிகிறது; தென்னாபிரிக்க லெஜண்ட் புகழாரம்!

மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ராஹ் அபாரமாக செயல்பட்டு வருகிறார் என்று தென்ஆப்பிரிக்க அணியின் ஆலன் டொனால்ட் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு லிமிடெட் ஓவர் போட்டிகளில் மட்டுமல்லாது, டெஸ்ட் போட்டிகளிலும் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேல் முன்னணி பந்துவீச்சாளராக செயல்பட்டு வரும் ஜஸ்பிரித் பும்ரா, தென்னாபிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரில் அபாரமாக செயல்பட்டார். முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் காலில் ஏற்பட்ட சிறு பிசகு காரணமாக சரிவர பந்து வீசவில்லை. ஆனால் 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசி தாக்கத்தை ஏற்படுத்தினார்.

தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடரிலும் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு அச்சுறுத்தலாக இருந்தார். எடுக்கப்பட்ட 4 விக்கெட்டுகளில் இவர் மட்டுமே இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். இது மட்டுமல்லாது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மைதானங்களிலும் இவரது தாக்குதல் இன்றியமையாததாக இருந்தது.

இந்திய அணிக்கு மூன்றுவித போட்டிகளிலும் தன்னை மெருகேற்றிக் கொண்டு அதற்கு ஏற்றவாறு நன்றாக பந்து வீசி வரும் ஜஸ்பிரித் பும்ரா தென்ஆப்பிரிக்க அணியின் ஜாம்பவான் ஆலன் டொனால்ட் புகழாரம் சூட்டியுள்ளார்.

“சமகால கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு வீரர்களை நான் மிகச்சிறந்த வீரர்களாக கருதுகிறேன். குறிப்பாக இரண்டு பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் தங்களை அதற்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டு அபாரமாக செயல்பட்டு வருகின்றனர். ரபாடா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருவரும்தான் நான் குறிப்பிடும் வீரர்கள்.

இதில் குறிப்பாக பும்ராஹ் அபாரமான திறமைகளை வைத்திருக்கிறார். அவரைப் பார்க்கையில் மிகவும் ஆச்சரியமாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது. அவரது பந்துவீச்சு ஆக்சன் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. இதனால் அதிக அளவில் காயம் ஏற்பட முடியும். ஆனால் தன்னை சரியாக புரிந்து கொண்டு காயம் ஏற்படாமல் நன்றாக செயல்பட்டு முன்னணி வீரராக இருக்கிறார். சந்தேகத்திற்கு இடமின்றி பும்ராஹ் தான் டாப். ஒவ்வொரு போட்டியிலும் என்னை பிரமிக்க வைக்கிறார். தென்ஆப்பிரிக்கா உடன் நடந்த டெஸ்ட் தொடரில் அவரது பந்து வீச்சை கண்டுகளித்து மகிழ்ந்தேன். இனியும் அவரை தவறாமல் கவனிப்பேன்.” என்றார்.

Prabhu Soundar:

This website uses cookies.