‘அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்’ வீரர்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் அட்வைஸ்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணியிடம் 15 ரன்கள் வித்தியாசத்தில் வேதனையளிக்கும் வகையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தோல்வியடைந்தது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 17 ஓவர்களில் 79 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்திருந்தது.

அந்த சூழ்நிலையில் ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் காரேவுடனும் அதன் பின்னர் நேதன் கவுல்டர் நைலுடன் இணைந்து ஆட்டத்தை சிறப்பாக கட்டமைத்து 288 ரன்கள்இலக்கை கொடுக்க பேருதவியாக இருந்தார். இந்த ஆட்டம் முடிவடைந்த பின்னர் தோல்வி குறித்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் கூறியதாவது:இந்த ஆட்டத்தில் நாங்கள் வாய்ப்பை தவறவிட்டுவிட்டோம். இதில் இருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் இருந்து தோல்வியை சந்தித்தது ஏமாற்றமாகவே உள்ளது.

NOTTINGHAM, ENGLAND – JUNE 06: Steve Smith of Australia celebrates his half century during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between Australia and the West Indies at Trent Bridge on June 06, 2019 in Nottingham, England. (Photo by David Rogers/Getty Images)

கிரிக்கெட்டில் பார்ட்னர்ஷிப் பெரிய அளவிலான பங்கை வகிக்கிறது. ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் காரேவுடனும் அதன் பின்னர்நேதன் கவுல்டர் நைலுடனும் இணைந்து சிறந்த பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியதை நாங்கள் பார்த்தோம். அவர்கள்நேர்மறையாக விளையாடினார்கள். நேதன் கவுல்டர் நைலை 60 ரன்களுக்குள் ஆட்டமிழக்க செய்திருக்க வேண்டும். அதை நாங்கள் செய்யாததால் அதற்கான விலையை கொடுத்தோம்.

எங்களது வீரர்கள் தங்களது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் பொறுப்பையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் முக்கியமாக இலக்கை துரத்தும் போது பொறுப்புடன் செயல்பட வேண்டும். எங்களது டாப் ஆர்டரில் உள்ள 4 வீரர்களில் யாரேனும் ஒருவர் களத்தில் நிலைத்து நின்று விளையாடியிருந்தால் ஸ்டீவ் ஸ்மித் செய்ததை செய்திருக்கலாம்.

NOTTINGHAM, ENGLAND – JUNE 06: Jason Holder of West Indies plays a shot for four during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between Australia and West Indies at Trent Bridge on June 06, 2019 in Nottingham, England. (Photo by Gareth Copley-IDI/IDI via Getty Images)

ஸ்டீவ் ஸ்மித் நிதானமாகவும் ஆட்டத்தை ஆழமாகவும் விளையாடினார். இதுவே எங்கள் அணிக்கும் தேவையாக இருந்தது. இதேபோன்ற ஆட்டத்தை ஷாய் ஹோப் எங்களுக்காக விளையாடி உள்ளார். ஆனால் இந்த முறை அவர், அதை செய்யவில்லை. அதேவேளையில் ஆஸ்திரேலிய அணியை பாராட்டியாக வேண்டும். அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள்.

இறுதி கட்டத்தில் மிட்செல் ஸ்டார்க் சிறப்பாக பந்து வீசினார். ஆட்டத்தின் தினம் அவருக்கு சிறந்த முறையில் அமைந்தது. ஒரு அணியாக பழைய பந்தில் சிறப்பாக பந்து வீசி எங்களுக்கு தொல்லைகளை கொடுத்தனர். அவர்களால், நாங்கள் பந்தை அடிப்பதா அல்லது தொடாமல் விட்டுவிடுவதா? என்ற முடிவை எடுக்க தள்ளப்பட்டோம். அபாரமான பந்து வீச்சால் எங்கள் முன் கேள்வியை எழுப்பினார்கள். இதுவே நான் அவர்களை பாராட்ட காரணம்.

இவ்வாறு ஜேசன் ஹோல்டர் கூறினார்.

Sathish Kumar:

This website uses cookies.