கோப்பையை கைமாற்றியது இந்த வீரர் செய்த அந்த தவறான ஒரு செயல்தான்? கேன் வில்லியம்சன் உருக்கமான பேட்டி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது.  இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற இந்த பரபரப்பான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் இங்கிலாந்து வென்று சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக வென்றது.
முன்னதாக ஆட்டத்தின் போது 3 பந்துகளில் 9 ரன்கள் எடுத்தால் என்ற இக்கட்டான நிலை இங்கிலாந்து அணிக்கு இருந்தது.   4-வது பந்தில் 2 ரன்களே ஓடி எடுக்கப்பட்ட நிலையில், ஓவர் த்ரோ மூலம் பவுண்டரி சென்று இங்கிலாந்து அணிக்கு ஆறு ரன்கள் கிடைத்தது. ஆட்டத்தின் முக்கிய திருப்புமுனையாக இந்த ஓவர் த்ரோ அமைந்தது.

கோப்பையை கடைசி நேரத்தில் இழந்தது குறித்து நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் கூறியதாவது:

 (Photo by Gareth Copley-IDI/IDI via Getty Images)

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில், அதிலும் கடைசி நேரத்தில் எங்களுக்கு இப்படியெல்லாம் நேர்ந்திருக்க கூடாது. பென் ஸ்டோக்ஸ் பேட்டில் பந்து பட்டு ஓவர் த்ரோவில் பவுண்டரி சென்றது உண்மையில் துரதிர்ஷ்டம். ஆனால், அந்த அந்த நேரத்தில் அதுபோன்று நடந்திருக்க கூடாதுதான். அதில் குறை கண்டுபிடிக்க விரும்பவில்லை. இனிமேல் வரும் காலங்களில் இதுபோன்று ஒருபோதும் நடக்கக் கூடாது.

நியூஸிலாந்து வீரர்கள் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடினார்கள். இறுதிப்போட்டியில் வெற்றிக்காக மிகவும் போராடினார்கள். அதை எளிதாகச் சொல்லிவிட முடியாது. எங்கள் அணி வீரர்களின் அந்த உழைப்பு கடைசிநேரத்தில் அழிக்கப்பட்டுவிட்டது. இந்த தருணத்தை என்னால் ஜீரணித்துக்கொள்வது கடினமாக இருக்கிறது. ஆனால், எங்கள் அணி வீரர்களின் உழைப்பு உண்மையில் அற்புதமானது.

 இன்னும் 10-20 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தால் சிறப்பானதாக இருந்திருக்கும். எங்கள் வீரர்களும் சிறப்பாக ஆடினார்கள். கடைசி வரை போராடினார்கள். அவர்களுக்கு நன்றி.

இவ்வாறு வில்லியம்ஸன் தெரிவித்தார்.

 

இந்த போட்டியில் பின்னர் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 6 பந்துகளில் 15 ரன்கள் அடித்தது.
16 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 6 பந்துகளில் 15 ரன்கள் அடித்தது. இதையடுத்து பவுண்டரிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. 26 பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பையை முதல் முறையாக இங்கிலாந்து அணி கைப்பற்றி சாதனை படைத்தது.

Sathish Kumar:

This website uses cookies.