புதிய 2 பயிற்சியாளர்கள் நியமனம்: பிசிசிஐ ஆடும் புதிய ஆட்டம்!

பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் பயிற்சியாளர்களாக ரமேஷ் பவார் மற்றும் கனித்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அகாடமி பெங்களூருவில் உள்ளது. அகாடமியின் தலைவராக சமீபத்தில் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். தற்போது கனித்கர் பேட்டிங் பயிற்சியாளராகவும், ரமேஷ் பவார் பந்து வீச்சு பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் ராகுல் டிராவிட்டுக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும். தேவைப்பட்டால் இந்தியா ஏ, 19 வயதிற்கு உட்பட்டோர் இந்தி அணி, U-23 போன்ற அணிகளுடன் பயணிக்க வேண்டும்.

கனித்கர் ஏற்கனவே ரஞ்சி டிராபியில் தமிழ்நாடு அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். ரமேஷ் பவார் இந்திய பெண்கள் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார்.

இந்நிலையில்,

ஒரே நபர் இரண்டு பதவிகளில் இருக்கக்கூடாது என்ற விதியை ராகுல் டிராவிட் மீறியதாக அளிக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் ராகுல் டிராவிட்டை விசாரணைக்கு அழைத்துள்ளது பிசிசிஐ.

பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் (NCA) இயக்குனராக உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணை தலைவராகவும் உள்ளார். ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமை இந்தியா சிமெண்ட்ஸிடம் உள்ளது.

NCAவின் தலைவர் பதவியை ஏற்கும் முன்னதாக இந்திய ‘ஏ’ மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணிகளுக்கான தலைமை பயிற்சியாளராக டிராவிட் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் மத்திய பிரதேச கிரிக்கெட் அசோசியேசனின் வாழ்நாள் உறுப்பினரான சஞ்சீவ் குப்தா என்பவர், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர் மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனர் என இரட்டை பதவிகளில் டிராவிட் ஆதாயம் பெருவதாக பிசிசிஐயிடம் புகார் மனு அனுப்பியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் பிசிசிஐயின் நெறிமுறைகள் குழு உறுப்பினர் டி.கே.ஜெயின் முன்னிலையில் நாளை ஆஜராக டிராவிட்டிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் நாளை காலை அவர் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.

முன்னதாக, இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் ஊழியராக வருகை புரிவதில்லை, அதில் இருந்து விடுப்பு எடுத்துள்ளேம், எனக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் எந்தவித பிணைப்பும் இல்லை என டிராவிட் விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிசிசிஐயின் விதிமுறைப்படி ஒரு நபர் இரட்டை பதவிகளில் ஒரே நேரத்தில் இருக்க முடியாது. நாளை நடக்கும் விசாரணையின் முடிவில் டிராவிட் விவகாரத்தில் முடிவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sathish Kumar:

This website uses cookies.