வீடியோ : சச்சின் டெண்டுல்கர் பந்தை கவர் திசையில் விளாசும் கைப் மகன்

முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் மற்றும் உலகின் சிறந்த பீல்டர்களில் ஒருவர் முகந்து கைப். தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அவருடைய காலத்தில் இந்திய அணிக்காக அற்புதமாக ஆடியவர் கைப். இவர் தான் முதன் முதலாக இந்திய அண்டர்-19 அணிக்கு உலகக்கோப்பை வாங்கி கொடுத்த கேப்டன் ஆவார். மேலும் இந்திய அணியின் பீலடிங் யூனிட் தற்போது இவ்வளவு தரமாக இருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் முகமது கைப் என்று சொன்னால் மிகையாகாது.

இவருக்கு ஒரு மகன் இருக்கிறார் ஜூனியர் கைப். இன்னும் 5 வயதை கூட கடக்காத அவர் தற்போது சச்சின் டெண்டுகரின் ஓமந்தை விளாசியுள்ளார். ஆம், ஒரு புகழ்பெற்ற கேமிங் செண்டரில் கைப்பின் மகன் பவுலிங் மெசினிக் சச்சின் டெண்டுல்கர் வீசுவது போல் செட் செய்து அவரது பந்தை அடித்து விளாசுகிறார் இந்த வீடியோ தர்ப்பது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கந்த வீடியோவை பார்த்த சச்சின் டெண்டுல்கர் ஜூனியர் கைப்பை பாராட்டியுள்ளார்.

கவர் திசையில் அற்புதமாக அடிக்கிறார் ஜூனியர் கைப். அருமையாக செய்துள்ளீர்கள். இன்னும் வளர வாழ்த்துக்கள்.

என ட்வீட் செய்து பாராட்டியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்

Editor:

This website uses cookies.