ஒரு காலத்தில் இவர்தான் தமது அடுத்த கபில் தேவ் என ஊடகங்களால் கொண்டாடப்பட்ட அவர், கொண்டாடப்பட்ட அதே வேகத்தில் அணியை விட்டு வெளியே தள்ளப்பட்டார். இடது கையில் வேகப்பந்து வீச்சாளரான அவரை ஆல் ரவுண்டராக ஆக்க நினைத்த தவறு செய்தார் முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் ஜான் ரைட்.
பின்னர் இர்பானும் ஃபார்ம் அவுட் ஆக அணியை விட்டு வெளியே தள்ளப்பட்டார். ஆனால் அவ்வப்போது அணியில் இடம் பெற்று தலையை காட்டி வரும் அவர் உள்ளூர் போட்டிகளில் எல்லாம் சிறப்புடன் விளையாடி வருகிறார். ஆனாலும் தேர்வுக் குழுவோ அவரை சட்டை செய்வதில்லை.
தற்போது மீண்டும் தனது ஃபார்மை நிரூபித்துள்ளார் அவர். உள்ளூர் டி20 தொடரான சைத் முஸ்தாக் அலி டிராபி யில் அற்புதமான ஒரு பந்து வீசி பேட்ஸ்மேனை நிலைகுலையச் செய்து அவரது ஸ்டெம்பை காலி செய்து உள்ளார் இர்பான்.
அதே போட்டியில் பரோடா அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.கடைசியாக இந்திய அணிக்காக ஒரு நாள் போட்டிகள் ஆடிய போதும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆனாலும் அவருடைய காயங்கள் அவரை மென்மேலும் இந்திய அணிக்காக விளையாடுவதை தடுக்கிறது என்பதே உண்மை. ஆனாலும் அவர் எப்போதும் சிறப்பாக தான் பந்து வீச்சில் செயல்படுபகிறார்.
பாதன் டெஸ்ட் போட்டியில் யாரும் இதுவரை படைக்காத ஒரு சாதனையை தனது இளம் வயதிலேயே படைத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் முதல் ஓவரில் முதல் மூன்று பந்துகளில் விக்கெட் எடுத்த முதல் வீரர் பதான் ஆவார். இன்று வரை இந்த சாதனையை படைத்த ஒரே வீரர் பதான் மட்டுமே ஆவார்.
அவர் தற்போது நடந்து வரும் சைத் முஸ்தாக் அலி டிராபியில் அற்புதமான ஒரு பந்து வீசி தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதற்காக ரசிகர்களும் பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.
அந்த வீடியோ துணுக்கு கீழே உள்ள இணைப்பில் உள்ளது :