வயசாகிடுச்சுடா… இதுக்கு மேல என்னால முடியாது; டெஸ்ட் போட்டிகளில் இனி விளையாட வாய்ப்பே இல்லை; அதிரடியாக அறிவித்த இங்கிலாந்து வீரர் !!

டெஸ்ட் போட்டிகளில் தான் இனி விளையாட வாய்ப்பே இல்லை என இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான மொய்ன் அலி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 7 டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி 4-3 என தொடரை கைப்பற்றி பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியது.

டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ்பட்லர் காயம் காரணமாக இந்த தொடரில் இடம் பெறவில்லை என்பதால் அவருக்கு பதில் தற்காலிக கேப்டனாக பொறுப்பேற்ற நட்சத்திர ஆல்ரவுண்டர் மோயின் அலி தன்னுடைய தலைமையில் இங்கிலாந்து அணிக்கு அபார வெற்றியை பெற்றுக் கொடுத்து அசத்தியுள்ளார்.

இந்த நிலையில் டி20 உலக கோப்பை தொடர் முடிந்தவுடன் பாகிஸ்தானுக்கு மீண்டும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், தான் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வையை அறிவித்துக் கொள்வதாக டெய்லி மைல் என்ற பத்திரிக்கைக்கு மோயின் அலி செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில் தன்னால் இதற்கு மேலும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாட முடியாது என்றும் அதிலிருந்து ஓய்வு அறிவிக்க உள்ளேன் என்றும் மோயின் அலி தெரிவித்திருந்தார்.

அதில், “இந்தத் தொடரை கஷ்டமாக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை, என்னால் இனி மேலும் முடியாது, நான் இது சம்பந்தமாக ஏற்கனவே அணியின் பயிற்சியாளர் மெக்களமிடம் பேசினேன், என்னால் இனி மேலும் ஹோட்டலில் அடைந்து கொண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாட முடியாது, இது சம்பந்தமாக மெக்களம் என்னிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நீண்ட நேரம் பேசினார் ஆனால் நான் என்னை மன்னித்து விடுங்கள் இதற்கு மேலும் என்னால் முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டேன், அவருக்கு என்னுடைய நிலைமை நன்றாகவே புரியும், கடந்த சம்மரில்(2021) முறை ஓய்வு அறிவிப்பதிலிருந்து பின் வாங்கினேன் என்பது அவரிடம் தெரிவித்தேன், 17 வருடங்களுக்குப் பின்பு பாகிஸ்தான் நாட்டின் விளையாடும் தடையை நீக்கியிருந்தாலும் என் மனம் மாறப்போவது கிடையாது,எனக்கு தற்பொழுது 35 வயதாகிவிட்டது எதையாவது நான் இழந்து தான் ஆக வேண்டும் என்று மோயின் அலி திட்டவட்டமாக அதில் தெரிவித்திருந்தார்.மேலும் தனக்கு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவது மிகவும் பிடிக்கும் என்றாலும், லிமிடெட் ஓவர் போட்டிகள் அதிகமாக இருப்பதால் தான் குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும் என்பதற்காகவும், டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெற்றேன் என தெரிவித்த மோயின் அலி, இங்கிலாந்து அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளின் பங்கேற்று விளையாடியது என்னுடைய கனவு நிறைவேறியது போல் உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

2021ஓய்வை வாபஸ் பெற்ற மோயின் அலி…

கடந்த 2021ல், இதற்கு மேல் என்னால் டெஸ்ட் போட்டிகளில் விளையாடமுடியாது என்று வெளிப்படையாக கூறிய மோயின் அலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பதாக தெரிவித்திருந்தார். பின் அணி நிர்வாகத்தின் வேண்டுகோளின் படி மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடினர்.

 

இந்த நிலையில் 17 வருடங்களுக்குப் பின்பு பாகிஸ்தான் நாட்டில் இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க தொடரை மோயின் அலி நிராகரித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வட்டத்தில் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.