2021 உலகக் கோப்பை தொடர் துபாய் அமீரகத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது இந்த போட்டியில் எப்படியாவது தனது அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்று அனைத்து அணிகளும் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.
இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி தான் கோப்பையை வெல்லும் என்று தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பேசி வந்த நிலையில் இந்திய அணி மிகவும் மோசமாக செயல்பட்டு தான் எதிர்கொண்ட முதல் இரண்டு போட்டிகளில் படுதோல்வியடைந்தது,அதற்குப் பின் ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிவுதற்கான வாய்ப்பு உள்ளது என்று பேசப்பட்டு வந்த நிலையில் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா 47 பந்துகளில் 72 ரன்கள் அடித்து அசத்தினார் மேலும் அந்த ஆட்டத்தின் பிளேயர் ஆப் த மேட்ச் பட்டத்தையும் வென்றார்.
அதிகம் விமர்சிக்கப்பட்ட ரோகித் சர்மா மீண்டும் கம்பேக் கொடுத்தது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் உற்சாகத்தை அளித்தது நிலையில் ரோஹித் சர்மா பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் பேசிய அவர், 2016 டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடியது முதல் இன்றுவரை நிறைய போட்டிகளில் விளையாடிய அனுபவம் எனக்கு கிடைத்துள்ளது, தற்பொழுது நான் ஒரு பக்குவமான பேட்ஸ்மேனாக மாறிவிட்டேன், சூழலுக்கு தகுந்தவாறு முடிவெடுத்து விளையாடுவதில் முன்பைவிட தற்போது நன்கு அனுபவம் அடைந்து விட்டேன்.மேலும் தனது அணிக்கு தேவைக்கேற்ப ஷாட்களை தேர்ந்தெடுத்து விளையாடுகிறேன் என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
2007 உலக கோப்பை தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணியில் விளையாடிய ரோஹித் சர்மாதான் தற்போதைய உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விளையாடிய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.