இந்த முறை விட்டுவிட மாட்டேன்! மார்தட்டும் தமிழக வீரர்!

2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக விளையாடிய தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் வருண் சக்ரவர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் அவர் காயம் ஏற்பட்ட காரணத்தினால் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் தொடரில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக தங்கராசு நடராஜன் இந்திய அணியில் களமிறங்கிய அனைத்து வகை கிரிக்கெட்டிலும் மிக சிறப்பாக விளையாடி தன்னுடைய திறமையை நிரூபித்தார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

ஆஸ்திரேலிய தொடரில் விளையாட முடியாத வருண் சக்கரவர்த்தி, நிச்சயமாக இங்கிலாந்து தொடரில் விளையாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் பிட்னஸ் டெஸ்டில் தோல்வி அடைந்தார். இதன் காரணமாக இங்கிலாந்து தொடரில் விளையாடும் வாய்ப்பை அவர் இழந்துவிட்டார்.

இலங்கைக்கு எதிரான தொடரில் வருண் சக்கரவர்த்தி

இந்நிலையில் ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது குறிப்பிடத்தக்கது. அதில் வருண் சக்கரவர்த்திக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தாலும் அவர் மீண்டும் பிட்னஸ் டெஸ்டில் தகுதி அடைய வேண்டும். இது சம்பந்தமாக சமீபத்தில் பேசியுள்ள சக்கரவர்த்தி நான் நிச்சயமாக பிட்னஸ் டெஸ்டில் நிச்சயமாக தேர்வாகி விடுவேன் என்று கூறியிருக்கிறார்.

நான் எனது உடல் தகுதி குறித்து நிறைய விஷயங்களை செய்து வருகிறேன். கடின உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன் என்றும், நிச்சயமாக இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடப் போவதாக நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

ராகுல் டிராவிட் என்னிடம் கூறிய வார்த்தைகள்

மேலும் பேசிய அவர் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் என்னிடம் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். உன்னிடம் திறமை இருக்கிறது ஆனால் அது மட்டும் பத்தாது நீ நாளுக்கு நாள் உன்னுடைய திறமையை மெருகேற்ற வேண்டும். தொடர்ந்து உன்னுடைய விளையாட்டை நீ மேம்படுத்திக் கொண்டே போக வேண்டும் என்று என்னிடம் அறிவுரை கூறினார்.

அவர் கூறிய அறிவுரைகளை நான் என் மனதில் வைத்து இருக்கிறேன். நிச்சயமாக இந்திய அணிக்கு சர்வதேச அளவில் விளையாட வேண்டும் என்பது என்னுடைய கனவு என்று வருண் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் ஷிகர் தவான் இடம் நான் நிறைய உரையாடி இருக்கிறேன். எப்போதும் கல கலவென பேசக்கூடிய ஒரு நல்ல மனிதர் அவர். அவரது தலைமையின் கீழ் இலங்கையில் இந்திய அணிக்காக விளையாட மிக ஆர்வமாக இருப்பதாகவும் வருண் சக்கரவர்த்தி இறுதியாக கூறி முடித்தார்.

Prabhu Soundar:

This website uses cookies.