எனது வேலை இது தான்; பொறுப்பாக பேசும் புதிய தலைவர் கங்குலி !!

எனது வேலை இது தான்; பொறுப்பாக பேசும் புதிய தலைவர் கங்குலி !!

“இந்திய கிரிக்கெட்டில் விராட் கோலி மிக முக்கியமான ஒரு வீரர்” என்று கூறும் சவுரவ் கங்குலி, தான் பிசிசிஐ தலைவராக இருக்கும் காலக்கட்டத்தில் அவருக்கு அனைத்தையும் எளிதாக்குவதற்குத்தான் இருக்கிறேன் என்றும் கடினமாக்க அல்ல என்றும் பிசிசிஐ புதிய தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

“நாளை நான் விராட் கோலியுடன் பேசுகிறேன். இந்திய கிரிக்கெட்டில் கேப்டனாக அவர் மிக முக்கியமான ஒரு நபர், நான் அந்த வழியில்தான் பார்க்கிறேன், நான் ஏற்கெனவே கூறியது போல் சாத்தியமாகக்கூடிய வழிகளிலெல்லாம் அவருக்கு முழு ஆதரவு அளிப்போம். இந்திய அணியை உலகிலேயே சிறந்த அணியாக உருவாக்க அவர் விரும்புகிறார். உள்ளபடியே கூற வேண்டுமெனில் கடந்த 3-4 ஆண்டுகளாக இந்திய அணியினர் கிரிக்கெட் ஆட்டங்கள் அதனை சிறந்த அணியென்றே வர்ணிக்க வைக்கிறது.

அனைத்தும் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும். அவர்களுக்கு அனைத்தையும் எளிதாக்க வேண்டியதுதான் என் வேலை. கடினமாக்குவதல்ல. அனைத்தும் ஆட்டத்திறன் அடிப்படையில்தான் முடிவு செய்யப்படும்.

திறமைதான் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை முடிவு செய்யும். இதில் விராட் கோலிதான் முக்கியமான நபர். அவருக்கு ஆதரவு அளிப்போம், அவர் கூறுவதைக் கவனிப்போம். நானே கேப்டனாக இருந்ததால் எனக்குப் புரியும். பரஸ்பர மரியாதை அங்கு உண்டு, கருத்துகளும் விவாதங்களும் உண்டு, ஆட்டத்தின் நன்மைக்கான அனைத்தையும் செய்வோம்.

ஆம், உலகக்கோப்பையை வெல்லவில்லை என்கிறீர்கள், ஒவ்வொரு முறையும் உலகக்கோப்பையை வெல்ல முடியாது. கோலியை ஆதரிப்போம். அவர் என்ன விரும்புகிறாரோ அதைக் கொடுத்து இந்திய கிரிக்கெட் முன்னேற்றத்தை உறுதி செய்வோம்.

நான் இருக்கும் வரை அனைவருக்கும் உரிய மரியாதை உண்டு. சாம்பியன்கள் அவ்வளவு விரைவில் முடித்து விட மாட்டார்கள். தோனியின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. தன் கரியர் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பது தெரியவிலை. எனவே இதனை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

Mohamed:

This website uses cookies.