நாங்கள் இந்தியர்கள் இந்த மொழியில்தான் பேசுவோம்: ரசிகர்களை மதிக்காமல் பேசிய ரோஹித் சர்மா!

நாங்கள் இந்தியர்கள் என்பதால் ஹிந்தியில் தான் பேசுவோம் என ஆங்கிலத்தில் பேசுமாறு கோரிக்கை வைத்த ரசிகர்களின் கோரிக்கையை நிராகரித்தார் பிரபல கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா.

கரோனா அச்சுறுத்தலாலும் ஊரடங்கு உத்தரவாலும் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் கிரிக்கெட் வீரர்கள் ஓய்வில் உள்ளார்கள். இதனால் பிரபல கிரிக்கெட் வீரர்களான ரோஹித் சர்மாவும் பும்ராவும் நேற்று இன்ஸ்டகிராம் வழியாக ரசிகர்களிடம் உரையாடினார்கள்.

ரோஹித் சர்மாவும் பும்ராவும் ஒருவருக்கொருவர் ஹிந்தியில் பேசிக்கொண்டார்கள். அப்போது ஆங்கிலத்தில் பேசுமாறு ரசிகர்கள் இருவரிடமும் கோரிக்கை வைத்தார்கள். ஆனால் ரோஹித் சர்மாவும் பும்ராவும் ரசிகர்களின் கோரிக்கையை நிராகரித்தார்கள்.

ஆங்கிலத்தில் பேசுமாறு அவர்கள் கூறுகிறார்கள். முடியாது. நாங்கள் இந்தியர்கள். ஹிந்தியில் தான் பேசுவோம். தொலைக்காட்சிப் பேட்டிகளில் நான் ஆங்கிலத்தில் பேசுவேன். தற்போது நான் வீட்டில் இருக்கிறேன் என்றார் ரோஹித் சர்மா.

பும்ராவும் ரோஹித் சர்மாவின் கருத்தை ஏற்றுக்கொண்டார். நாம் ஆங்கிலத்தில் பேசினால் ஹிந்தியில் பேசச்சொல்கிறார்கள். ஹிந்தியில் பேசினால் ஆங்கிலத்தில் பேசச் சொல்கிறார்கள் என்றார்.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2500 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 56 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவைப் பொருத்தவரை தமிழகத்தில் தொடக்கத்தில் நிலைமை ஓரளவு கட்டுக்குள்தான் இருந்தது என்றே கூறலாம்.
அரசாங்கத்தின் கூற்றுப்படி, மார்ச் 14 ஆம் தேதி நடந்த டெல்லி நிஜாமுதீன் கூட்டம்  காரணமாக கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற ஜமாத் மாநாட்டுக்குச் சென்று வந்தவர்களால் தமிழகத்தில்  தற்போது முற்றிலும் புதியதொரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் தமிழகம் முழுவதும் பரவலாக இருக்கின்றனர். மேலும், பல நாள்களாக மற்றவர்களுடன் பழகியும் இருக்கின்றனர்.
எனினும், இவர்களையும் இவர்கள் சம்பந்தப்பட்டவர்களையும் தேடிப் பிடித்து சிகிச்சையளிக்கும் நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டிருக்கிறது. இவ்வளவுதான் மாநாட்டில் சம்பந்தப்பட்டவர்கள், தொற்று பாதிக்கப்பட்டிருக்கக் கூடியவர்கள் என்ற முடிவுக்கு வர முடிந்தால் மாநிலத்தில் நிலைமை மேம்படும்.

Sathish Kumar:

This website uses cookies.