நான் எதுக்கு பயப்படனும்…? இந்திய அணியில் எனக்கான இடம் கண்டிப்பா கிடைக்கும்; காத்திருக்கும் குல்தீப் யாதவ் !!

தோல்விகளை பார்த்து எனக்கு பயம் கிடையாது என்று குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

தோனி கேப்டனாக செயல்பட்ட போது இந்திய அணியின் துருப்புச் சீட்டாக செயல்பட்ட குல்திப் யாதவ், தோனியின் ஓய்விற்கு பின் தன்னுடைய பந்துவீச்சால் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

இதன் காரணமாக இவர் இந்திய அணிலிருந்து முற்றிலுமாக ஓரம் கட்டப்பட்டார். இந்திய அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டாலும், ஐபிஎல் தொடரிலாவது சிறப்பாக செயல்படலாம் என்று எண்ணிய குல்திப் யாதவை 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு தொடர்களிலுமே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாட விடாமல் பெஞ்சில் அமர வைத்திருந்தது.

 

இது ஒரு புறமிருக்க 2021 ஐபிஎல் தொடரிலே குல்திப் யாதவிர்க்கு முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டு நாலு மாதத்திற்கு மேல் விளையாட முடியாமல் போய்விட்டது. சோதனைக்கு மேல் சோதனை வந்தாலும் சோர்ந்து விடாமல் கடுமையான பயிற்சி செய்து 2022 ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல் அணிக்காக விளையாடிய குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்பட்டு பல போட்டிகளில் டெல்லி அணி வெற்றி பெறுவதற்கு உதவியாக இருந்துள்ளார்.

இதன் காரணமாக இவர் மீண்டும் இந்திய அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் இளம் வீரர்கள் வருகையால் இவருக்கு உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

 

இந்த நிலையில் தான் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாதது குறித்தும், காயத்திலிருந்து குணமாகி வெளிவந்தது குறித்தும் குல்தீப் யாதவ் செய்தியாளர்கள் சந்திப்பில் மனம் திறந்து பேசியுள்ளார்.

இதுகுறித்து குல்தீப் யாதவ் பேசுகையில், நாலு மாத காயத்திலிருந்து குணமா பின்பு போதுமான நேரம் கிடைக்கவில்லை, இதை நான் எப்படி சமாளிக்க போகிறேன் என்று எனக்கு தெரியாமல் இருந்தது, பின் பந்தை வேகமாக வீச வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்தேன், எந்த தோல்வியை பார்த்தும் தற்பொழுது நான் அஞ்சுவது கிடையாது, எப்பொழுதெல்லாம் நாம் தோல்வியை சந்திக்கிறோம் அப்பொழுது எல்லாம் நிச்சயம் பாடம் கற்றுக் கொள்வோம். 2022 ஜனவரியில் நான் இந்திய அணிக்காக விளையாடும் போது நான் தோல்வியை பார்த்து பயப்படவில்லை, நான் போட்டியை மிகவும் ரசித்து விளையாடினேன், என்னுடைய ஒரே நோக்கம் நல்ல லெந்த்தில் பந்தை வீச வேண்டும் என்பது மட்டும்தான். விக்கெட்டை வீழ்த்துவது என்பது நம்முடைய கையில் கிடையாது, நாம் நன்றாக பந்து வீசினால் வாய்ப்புகள் அதுவாக உருவாகும் என்று குல்தீப் யாதவ் பேசியிருந்தார். மேலும் பேசிய அவர், நேர்மையாக சொல்லப்போனால் நான் காயத்தில் இருந்து குணமாகியபின்பு ரிதம் மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்தேன், என்னால் முன்பு போல் சிறப்பாக செயல்பட முடியவில்லை, இருந்த போதும் கடுமையாக முயற்சி செய்து என்னுடைய கண்ட்ரோலயும் ,ரிதமையும் மாத்தியுள்ளேன்.உண்மையை சொல்லப்போனால் என்னுடைய காயம் எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்றே சொல்லலாம், என்னால் என்னுடைய உடலையும் என்னுடைய ரிதத்தையும் பற்றி சிந்திக்க முடிந்தது, இது கொஞ்சம் சவாலாக தான் இருந்தது, ஆனால் மற்றதை விட இதுவே பரவாயில்லை. இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று எப்பொழுதுமே கடினமாகத்தான் இருக்கும்” என்றும் குல்தீப் யாதவ் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.