இனி அவ்வளவுதான் அவருக்கு ஒரு வாய்ப்பு கூட கிடைக்காது; சீனியர் வீரர் குறித்து பேசிய சுனில் கவாஸ்கர் !!

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் பொழுது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் எதிர்காலம் குறித்து பேசியுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாகவே சிறப்பாக பந்து வீச முடியாமல் திணறி வரும் இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்,எப்படியாவது இழந்த தன்னுடைய பார்மை மீட்டெடுப்பார் என்ற நம்பிக்கையில் இந்திய அணி இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை வழங்கியது, ஆனால் கொடுத்த அனைத்து வாய்ப்புகளையும் புவனேஸ்வர் குமார் வீணடித்து விட்டார்.

இதன் காரணமாக புவனேஸ்வர் குமார் அணியில் இருந்து கழட்டிவிட்டு வேறு ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது புவனேஸ்வர் குமாரின் கிரிக்கெட் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை என்று பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர், “தற்பொழுது என் மனதில் தோன்றுவதெல்லாம் புவனேஷ்வர் குமாரின் பெயர்தான், புவனேஸ்வர் குமார் தனக்கு கொடுத்த வாய்ப்பை எல்லாம் வீணடித்து விட்டார். இதன் காரணமாக அவருடைய கிரிக்கெட் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை, புவனேஸ்வர் குமார் தன்னுடைய வேகத்தை இழந்துவிட்டார், இதன்காரணமாக விக்கெட்டை வீழ்த்துவதற்கு தடுமாறி வருகிறார், இதனால் புவனேஸ்வர் குமார் தற்போது செய்யவேண்டியதெல்லாம் மீண்டும் ஆரம்பத்திலிருந்து கடுமையாக பயிற்சி செய்ய வேண்டும் என்பது மட்டுமே”, என்று சுனில் கவாஸ்கர் பேசியிருந்தார்.

மேலும் பேசிய அவர்,இந்திய அணியில் தேர்வாளர்கள் குழு இளம் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக தீபக் சஹாருக்கு அதிக வாய்ப்புகளை கொடுக்க வேண்டும், ஏனென்றால் தீபக் சஹர் மிக சிறப்பாக பந்துவீசிய கூடிய திறமையும் லோயர் மிடில் ஆர்டரில் சிறப்பாக பேட்டிங் செய்ய கூடிய திறமை படைத்தவர் என்று சுனில் கவாஸ்கர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.