நான் விரைவில் ஓய்வு பெறப் போகிறேன் அதிர்ச்சி அளித்த நட்சத்திர இந்திய வீரர்!

நான் விரைவில் ஓய்வு பெறப் போகிறேன் அதிர்ச்சி அளித்துள்ள முகமது ஷமி

இந்திய கிரிக்கெட் வரலாற்றின் ஆரம்ப காலகட்டங்களில் திரும்பிப் பார்த்தால் பேட்டிங் மற்றும் பவுலிங் சம அளவில் பார்க்கப் பட்டு இருக்கும். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல இந்திய அணி பேட்டிங் விளையாடும் வீரர்களை மட்டுமே நம்பி பல போட்டிகளில் இருக்கும். மேலும் பேட்ஸ்மேன்கள் மூலமாகவே பல வெற்றிகள் இந்திய அணிக்கு கிடைத்து வந்தது. ஆனால் 2015ஆம் ஆண்டிற்கு பின்னர் அப்படியே நிலைமை தலைகீழாக மாறியது. பேட்ஸ்மேன்கள் மூலம் கிடைக்கப் பெற்ற வெற்றியை விட பவுலர்கள் மூலம் கிடைக்கப் பெற்ற வெற்றிதான் இந்திய அணிக்கு தற்போது அதிகமாக இருக்கிறது.

அந்த அளவுக்கு இந்திய அணியில் தற்போது உலக அளவில் பந்துவீச்சாளர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். ஒரு வீரர் இல்லை என்றால் அந்த வீரருக்கு மாற்று வீரராக விளையாடுவார் எப்பொழுதும் இந்திய அணிக்காக தயார் நிலையில் இருப்பார். அப்படிப்பட்ட ஒரு மிகச்சிறந்த பவுலர் என்றால் அது முகமது ஷமி. அவர் தற்பொழுது நான் எப்பொழுது வேண்டுமானாலும் ஓய்வு பெற்றுக் கொள்வேன் என்று கூறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

எப்பொழுது வேண்டுமானாலும் நான் ஓய்வு பெறுவேன்

டெஸ்ட் போட்டிகளில் மிக அற்புதமாக பந்துவீசி வருபவர் முகமது ஷமி. இதுவரை இந்திய அணிக்காக மொத்தமாக 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 180 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார் டெஸ்ட் போட்டிகளில் இவரது பவுலிங் எக்கானமி 3.31 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 49.99 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இவரது rs.27.59 மட்டுமே. டெஸ்ட் போட்டியில் இவர் ஒரு மிகச்சிறந்த பவுலர் அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

முப்பது வயதே ஆன இவர் இன்னும் நிச்சயமாக மூன்று அல்லது நான்கு ஆண்டுகளாக குறைந்தபட்சம் விளையாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். ஆனால் அதிர்ச்சி தரும் விஷயமாக அவர் கூறியுள்ளது தற்போது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்துயுள்ளது.நான் எப்பொழுது வேண்டுமானாலும் ஓய்வு பெறுவேன். அது எப்போது என்று என்னால் கூறிவிட முடியாது. ஆனால் நிச்சயமாக கூடிய விரைவில் அந்த செய்தியை நான் கூறுகிறேன் என்று கூறியுள்ளார்.

நான் ஓய்வு பெறும் நிலையில் எனக்கு உரிய வீரர் அணியில் இருப்பார்

மேலும் பேசிய முகமது ஷமி நான் ஓய்வு பெறும் பொழுது நிச்சயமாக எனக்கு இணையான ஒரு வீரர் அணியில் இருப்பார் அப்படி இருக்கும் பட்சத்தில் தான் ஓய்வு பெருவேன் என்றும் கூறியுள்ளார். பல இந்திய இளம் வீரர்கள் இவரிடம் வந்து பல ஆலோசனைகளை பெறுவது நம் அனைவருக்கும் தெரியும். இவரும் பல ஆலோசனைகளை கூறி இளம் வீரர்களை வழி நடத்துவார்.

தற்பொழுது கூட கூடிய விரைவில் இவர் ஓய்வுபெறப் போகிறார் என்றாலும், தனக்கு இணையான ஒரு இளம் வீரர்களை அணியில் நன்றாக விளையாட வைத்துவிட்டு தான் ஓய்வு பெற போவதாக கூறியுள்ளது அனைத்து ரசிகர்களையும் நெகிழ்ச்சி படுத்தியுள்ளது. முகமது ஷமி தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நிச்சயமாக நியூசிலாந்துக்கு எதிராக நடக்க இருக்கின்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இவர் விளையாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர். அதனைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகல் கொண்ட தொடரிலும் இவர் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Prabhu Soundar:

This website uses cookies.