பிரிதிவி ஷா தனது சிறப்பான ஆட்டத்தால் டெஸ்ட் அணியில் இடம் பெற்றுவிட்டார். அனால், ஒருநாள் போட்டியில் இடம்பெறுவதற்க்காக உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார். இந்நிலையில், உலகக்கோப்பை குறித்து கேட்டதற்கு, நன்றாக ஆட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ளது, உலகக்கோப்பை செல்லும் அணியில் இடம்பெறுவது குறித்து யோசிக்கவே இல்லை என்றார்.
இதுவரை, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை ஆடிய 5 போட்டிகளில் இவரது ஸ்கோர்கள் முறையே 7, 24, 99, 0 மற்றும் 11.
இதுவரை ஆடிய ஆட்டங்கள் உலககோப்பை அணியில் இடம்பெற போதாது எனவும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
தனது யுக்தியை முழுமையாக பயன்படுத்த காத்திருக்கும் ஷா:
எனினும், நேர்மறையாக இருந்து வரும் ஷா முடிந்தவரை பல விளையாட்டுகளில் நன்றாக ஆடி டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வெற்றி பெற செய்ய ஆர்வமாக உள்ளார்.
“நான் அடித்த 99 ரன்களை, அன்று அடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை.அதேபோல, டெல்லி அணிக்கு பல போட்டிகளில் ஆடி வெற்றிபெற செய்ய காத்திருக்கிறேன். எனினும், உலகக்கோப்பையில் இடம்பெற வென்றும் என்றால் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். இதுவரை ஆடியது சற்றும் போதாது. ஆனால், நான் சிறப்பாக ஆடுவது குறித்து யோசிக்கிறேன். “என்று ஷா பெங்களூருவில் நிருபர்களிடம் கூறினார்.
“போட்டியில் போட்டியில் கலந்துகொள்ளும் ஒரு நபராக இருக்கிறேன், இப்போது உலகக் கோப்பை பற்றி நான் நினைக்கவில்லை,” ஷா கூறினார்.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் வென்றதன் மூலம், டெல்லி அணி ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. அவர்கள் இப்போது ஐந்து போட்டிகளில் இரண்டு முறை வென்றுள்ளனர்.
ரிக்கி பாண்டிங் பயிற்சி குறித்து கேட்டதற்கு பதில் அளித்த ஷா கூறியதாவது.
“ரிக்கி சர் ஒரு பெரிய மனிதர். அவர் மிகவும் அமைதியாக இருக்கிறார். விளையாட்டின் மனோபாவத்தை எப்படி கையாளுவது என்று அவர் கற்றுக்கொடுக்கிறார், விளையாட்டின் தொழில்நுட்ப அம்சத்திற்கு அவரின் அனுபவங்கள் எங்களுக்கு உதவுகின்றன, “என்று அவர் கூறினார்.