இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக நடைபெற்று வருகிறது இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது 2வது ஆட்டத்தில் ஆடிக்கொண்டிருந்தபோது ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னிடம் இந்திய கேப்டன் விராட் கோலி அடிக்கடி சீண்டிக்கொண்டே இருந்தாளர்.
மேலும் தனது விக்கெட்டை விடாமல் நின்ற ஆடிக்கொண்டிருந்த அவரிடம் சென்று விராட் கோலி…
நான் உலகிலேயே சிறந்த பேட்ஸ்மேன் நீ வெறும் தற்காலிக கேப்டன் மட்டுமே… வேகமாக அவுட்டாகிவிடுு. இல்்லையெனில் இந்த போட்டியில் நாங்கள் வென்று முன்னேறிச் சென்று கொண்டே இருப்போம் என்று கலாய்த்துள்ளார்.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய அந்த அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மார்கஸ் ஹாரிஸ் 70 ரன்கள் சேர்த்தனர். இஷாந்த் ஷர்மா 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 123 ரன்கள் குவித்தார். நாதன் லயன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
43 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக ஆடிய உஸ்மான் கவாஜா 72 ரன்கள் சேர்த்தார். முகமது ஷமி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்நிலையில், 287 என்ற வெற்றி இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸில் களமிறங்கி இந்திய அணி தடுமாறி வருகிறது. 55 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ராகுல் 0, முரளி விஜய் 20, புஜாரா 4, விராட் கோலி 17, ரஹானே 30 ரன்களுடன் ஆட்டமிழந்தனர். ஹாசில்வுட், லயன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஸ்டார்க் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 4-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் எடுத்துள்ளது. விஹாரி 24, ரிஷப் பந்த் 9 ரன்களுடன் களத்தில் உள்ளனர். கடைசி நாள் ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இப்போட்டியில் இந்தியா வெற்றிபெற 175 ரன்கள் தேவைப்படுகிறது. இதனால் ஆஸ்திரேலிய அணியின் கை ஓங்கியுள்ளது.
இந்திய அணியில் இருந்து இளம் நட்சத்திர துவக்க வீரர் பிருத்வி ஷா நீக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதையடுத்து நடைபெற்று வரும் 2-ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில், இந்திய அணியில் இடம்பிடித்துள்ள இளம் நட்சத்திர வீரர் பிருத்வி ஷா, காயம் முழுமையாக குணமடையாத காரணத்தால் இந்த தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் மாற்று வீரராக மயங்க் அகர்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தொடக்க வீரர்கள் முரளி விஜய் மற்றும் ராகுல் தொடர்ந்து மேசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் நிலையில், பிருத்வி ஷா விலகல் இந்திய அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, ஆஸ்திரேலிய லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கேட்ச் பிடிக்க முயன்றபோது இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷாவின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்தபோது தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது.