சென்னை அணிதான் என்னை ஒரு சிறந்த கிரிக்கெட் வீரனாக மாற்றியது : சசுரேஷ் ரெய்னா
பெங்கால் அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் உ.பி. அணிக்காக விளையாடும் சுரேஷ் ரெய்னா 49 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.
உத்தர பிரதேசம் அணி கேப்டன் சுரேஷ் ரெய்னா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி உத்தர பிரதேச அணியின் சமர்த் சிங், சவுத்ரி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் 3-வது பந்தில் சமர்த் சிங் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். சவுத்ரி 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ரெய்னாவுடன் விக்கெட் கீப்பர் நாத் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பெங்கால் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தது. குறிப்பாக ரெய்னா வாணவேடிக்கை நிகழ்த்தினார். அவர் 49 பந்தில் சதம் அடித்தார்.
இந்த அதிரடியான ஆட்டத்திற்கு பிறகு பேசிய ரெய்னா தன்னுடைய இரண்டாவது வீடு சென்னையை பற்றி பேசினார்.
சுரேஷ் ரெய்னா கடந்த 2005ஆம் ஆண்டு தனது சர்வதேச பயணத்தை துவக்கினார். 2008ஆம் ஆண்டு சென்னை அணியால் ஐ.பி.எல் போட்டிகளில் ஆட ஏலத்தில் எடுக்கப்பட்டார். அன்றிலிருந்து இன்று வரை சென்னை அணிக்காக ஆடி வருகிறார் (16,16 தவிர)
நான் சென்னை அணிக்காக பல போட்டிகளை ஆடியுள்ளேன். நானும் தோணியும் கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளிலும் சென்னை அணிக்காக சேர்ந்த ஆடியுள்ளோம். சொல்லப்போனால், சென்னை அணிக்காக எனது இளமை காலம் முதல் ஆடி வருவதால், அந்த தான் என்னுடைய கிரிக்கெட் திறமை நன்றாக வளர்ந்தது. மேத்யூ ஹைடன், முத்தையா முரளிதரன், மைக்கேல் ஹசி, என பல ஜாம்பவான்கள் என்னுடைய ஆட்டத்தை மெருக்கேற்றினர்.
அது ஒரு அணி இல்லை. சென்னை ஒரு குடும்பம். அங்கு எங்களுக்கு நிறைய அன்பு கிடைத்தது. சென்னை அணி நிறைய வீரர்களை உருவாக்கி உள்ளது. அஸ்வின், நெகி, ஜடேஜா எல்லோரும் சி எஸ்.கே வீர்ரகள் தான். சென்னை அணிக்காக மீண்டும் ஆட ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறேன் எனக் நெகிழ்ச்சியுடன் கூறினார் ரெய்னா.