வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரரான ஆண்ரே ரசல் கடந்த 2020க்கான ஐபிஎல் தொடரில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு விளையாடவில்லை.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய வீரராக திகழும் ஆண்ரே ரசல் 2020 க்கான ஐபிஎல் போட்டியில் எதிர்பார்த்த அளவு சிறப்பாக செயல்படவில்லை.
கொல்கத்தா அணியின் ஆல்ரவுண்டர் ஆண்ரே ரசல் சிறப்பாக செயல்படாததால் ரசிகர்கள் பலரும் கவலையில் உள்ளனர்.
2019 ஐபிஎல் தொடரில் இவர் கொல்கத்தா அணிக்காக மிகவும் அபாரமாக செயல்பட்டார். பலமுறை அணி வெற்றி பெற்றதற்கு இவருடைய அதிரடியான ஆட்டம்தான் முக்கிய காரணம், 2019இல் இவருடைய ஆவரேஜ் 56 ஆகும்.
எதிர்பாராதவிதமாக 2020 இவர் 10 போட்டிகளில் பங்கேற்று 117 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதற்கு முக்கியக் காரணம் அவருக்கு ஏற்பட்ட காயம் தான். அதிரடி வீரரான ஆண்ரே ரசல் காயம் காரணமாக இவரால் சிறப்பான வெளிப்பாட்டை கொடுக்க முடியவில்லை பேட்டிங்கிலும் பீல்டிங்கிலும் இவர் சிறப்பாக செயல்படவில்லை.
இதுபற்றி கூறிய ரசல், நான் எனது நிலைப்பாட்டை மாற்றினேன் எனது பேட்டிங் டெக்னிக்கையும் மாற்றினேன் இருந்தபோதும் என்னால் சிறப்பாக செயல்பட முடியவில்லை.
மேலும் அவர் கூறியதாவது நான் பழைய நிலைக்கு மீண்டும் திரும்புவேன், வருகின்ற கரீபியன் பிரீமியர் லீக்கில் சிறப்பாக செயல்படுவேன் என்று அவர் கூறினார்.
இந்த கொரோன லக்டோன் சிறையில் இருப்பது போன்று உள்ளது இறைவனே என்னை காப்பாற்று என்பது போல் உள்ளது என்று அவர் கூறினார்.
2020 லங்க பிரிமியர் தொடரில் கொழும்பு கிங்ஸ் அணிக்காக ஆண்ரே ரசல் தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.