அணியின் மூத்த வீரர்கள் கேட்டுக் கொண்டிருந்தால் தானும் கூட பந்தை சேதப்படுத்தி இருப்பேன் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் தெரிவித்துள்ளார்.
பந்தை சேதப்படுத்திய புகாரில் தண்டனை அனுபவிக்கும் கேமரூன் பேன்கிராஃப்ட் குறித்து பேசிய அவர், தாம் விளையாடிய கால கட்டத்தில், தம்முடைய கேப்டன் ஆலன் பார்டரோ அல்லது பயிற்சியாளர் பாபி சிம்ப்சனோ (Bobby Simpson) தவறான செயல்களை செய்ய கூறியதில்லை என்று தெரிவித்துள்ளார். ஒரு வேளை தவறான செயல்களை தாம் செய்திருந்தால் தம்மை கேப்டனும், பயிற்சியாளரும் அப்போதே தொலைத்திருப்பார்கள் என்றும் லேங்கர் தெரிவித்துள்ளார்.
பால் டேம்பரிங் சர்ச்சையில் தப்பிய டேரன் லீ மேன் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியுடன் தான் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஸ்மித், வார்னர், பேங்க்ராப்ட் ஆகியோரை ஆஸ்திரேலிய மக்கள் பெரிய மனதுடன் மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட டேரன் லீ மேன், “இந்த அறையில் அமர்ந்தவர்களுக்குத் தெரியும் மனதிற்கினியவர்களைப் பிரிந்து பாதிநாள் அணியுடன் பயணம் எவ்வளவு கடினம் என்பது தெரியவே தெரியும்.
எனவே என் குடும்பத்தினருடன் பேசி இதுதான் சரியான தருணம் என்று முடிவெடுத்தேன். அணி மீண்டும் மறுகட்டுமானம் அடைந்து விடும் என்று நம்புகிறேன், ஆஸ்திரேலிய மக்கள் தவறிழைத்த வீரர்களை மன்னிக்க வேண்டும்.
வீரர்களிடம் குட் பை என்று கூறுவது மிகக் கடினமான ஒரு விஷயம். சில நாட்களாகக் கடும் சர்ச்சைகள் ஏற்பட்டுவிட்டன, அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மேலே செல்லலாம் என்று கூறலாம் ஆனால் கடுமையான அவதூறுகள் நம்மை பாதிக்கவே செய்கின்றன. அவர்கள் தவறு செய்துவிட்டனர், ஆனால் மன்னிக்கப்பட வேண்டியவர்கள்” என்றார் லீ மேன்.
முன்னதாக ஸ்மித், வார்னர், பேங்கிராப்ட் தடைபற்றி கூறிய டேரன் லீ மேன், “நான் அவர்களுக்காக வருந்துகிறேன். அவர்கள் குடும்பத்தினருக்காகவும் வருந்துகிறேன், இந்த விவகாரத்தில் மனிதப்பக்கம் என்ற ஒன்று உள்ளது. அவர்கள் தவறு செய்துவிட்டனர், நானும் கடந்த காலத்தில் எத்தனையோ தவறுகள் செய்திருக்கிறேன்.
அவர்கள் இளம் வீரர்கள், மக்கள் அவர்களுக்கு 2-ம் வாய்ப்பு அளிப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்களது மன-உடல் ஆரோக்கியம் மிக மிக முக்கியமானது. அவர்கள் மனநிலையை நினைத்து நான் மிகவும் கவலையடைகிறேன்.