“தொடர்ந்து நான்கு நாட்கள் அழுதேன்” புலம்பும் ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன்

TOPSHOT – Cricketer Steve Smith reacts at a press conference at the airport in Sydney on March 29, 2018, after returning from South Africa.

மார்ச் மாதம் ஆஸ்திரேலியா தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையே நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் பொழுது பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்காக ஆஸ்திரேலியா அணியில் மூன்று வீரர்கள் தடை உத்தரவிட்டு நீக்கம் செய்யப்பட்டனர்.

பந்தை சேதப்படுத்தும் சம்பவத்தில் டேவிட் வார்னரும், ஸ்டீவ் ஸ்மித்தும் ஈடுபடுவது முதல்முறை அல்ல, ஏற்கெனவே உள்நாட்டு போட்டிகளில் இதுபோல் செய்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது என்று போட்டி நடுவர் டேர்ல் ஹார்பர் பரபரப்பு அறிக்கை விடுத்துள்ளார்.

கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர் இருவருக்கும் தலா 12 மாதங்களும் இதற்கு துணையாக இருந்த பென் கிராஃப்ட் க்கு 9 மாதங்கள் தடையும் விதித்து ஐசிசி நிர்வாகம் தீர்ப்பளித்தது.

இதனால் ஆத்திரமடைந்த ஸ்டீவன் ஸ்மித் தந்தை ஸ்மித்தின் கிரிக்கெட் சம்மந்தப்பட்ட அனைத்து பொருள்களையும் வீதியில் வீசி தன் ஆத்திரத்தை வெளிப்படுத்தியது இணைய வட்டாரங்களில் வைரலாக பரவியது.

இந்த ஒழுக்க நடவடிக்கையின் காரணமாக நான் தொடர்ந்து நான்கு நாட்கள் அறையை விட்டு வெளியே வராமல் அழுது கொண்டே இருந்தேன். மீண்டு வர மிகவும் சிரமப்பட்டேன். வாழ்நாளில் சரி செய்ய இயலாத தவறை இழைத்து விட்டேன். குடும்பத்தினரும் நண்பர்களும் தான் நான் இதிலிருந்து வெளிவர உதவினர். மனதினுள் வைக்காமல் அனைத்தையும் வெளியில் கொட்டி தீர்த்துவிடு என்று குடும்பத்தினர் பக்கபலமாக இருந்தனர். மேலும் என் ரசிகர்களும் என்னை விட்டு கொடுக்கவில்லை என்று ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் தனது மனதில் உள்ளதை புலம்பி தீர்த்தார்.

Former captain Steve Smith (C) of the Australian Cricket Team departs at O R Tambo International Airport after being caught cheating in the Sunfoil Test Series between Australia and South Africa, on March 28, 2018 in Johannesburg.
Disgraced Australia skipper Steve Smith and senior batsman David Warner were banned from cricket for 12 months over a cheating scandal that has rocked the sport and dragged their side’s reputation through the mud. / AFP PHOTO / GULSHAN KHAN (Photo credit should read GULSHAN KHAN/AFP/Getty Images)

ஒழுக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக குறிப்பிட்ட சமூகத்திற்கு உதவியாகவும், மீத நேரங்களில் கிரிக்கெட் குறித்து பாடம் எடுக்கவும் வேண்டும் என்று ஐசிசி கூறியது. இதற்காக, சிட்னியில் உள்ள ஒரு பள்ளியில் குழந்தைகளுக்கு கிரிக்கெட் பயிற்சி கொடுத்தார் ஸ்மித். மனவலிமையை மேம்படுத்தவும் அவர் தனிப்பட்ட முறையில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

மேலும் அவர், கனடா டி20 லீக் தொடரில் ஆடுவதர்காக தேர்வு செய்யப்பட்டது, முழுமையாக இதிலிருந்து வெளிவர உதவியாக இருக்கும். என்னை தேர்வு செய்த உரிமையாளர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். சிறப்பாக செயல்பட காத்திருப்பதாக தெரிவித்தார்.

Dave Richardson, chief executive of International Cricket Council (ICC)

இன்று ஐசிசி வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலிலும் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.

Vignesh G:

This website uses cookies.