இந்திய அணிக்காக விளையாடும் அளவிற்கு நான் வொர்த் கிடையாது…. உண்மையை பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் !!

இந்திய அணியின் இளம் வீரர் ரியன் பராக் இன்னும் தான் இந்திய அணியில் விளையாடுவதற்கு தகுதி ஆகவில்லை என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

ரியான் பராக்….

2019 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் அறிமுகமான அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரியான் தன்னுடைய அபாரமான திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் 2022 ஐபிஎல் தொடரிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.


பேட்டிங், பந்து வீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்திலும் அசத்தும் திறமை படைத்த 20 வயதாகும் ரியான் பராக் 2022 ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை, ஆனால் பீல்டிங்கில் இவருடைய ஆட்டம் வெறித்தனமாக இருந்தது, இந்த தொடரில் மொத்தம் இவர் 17 கேட்ச்களை பிடித்து அசத்தியுள்ளார்.

இப்படி வளர்ந்து வரும் வீரரான இவர் 2022 ஐபிஎல் தொடரில், கள நடுவர்களின் தவறான முடிவை விமர்சிக்கும் வகையில் செய்த செயல் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.


இருந்தபோதும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் குமார் சங்ககாரா ரியான் பாராக்கை விட்டுக்கொடுக்காமல், ரியான் பராக் திறமையான வீரர் நிச்சயம் அவர் எதிர்கால இந்திய அணியின் முக்கிய பங்கு வகிப்பார் என்று பாராட்டிப் பேசியுள்ளார்.

நான் இந்திய அணிக்கு விளையாட தகுதியான வீரர் கிடையாது…..

இந்த நிலையில் நீண்ட நாட்களுக்குப் பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரியான் பாராக், தான் இன்னும் இந்திய அளவிற்கு விளையாடும் அளவிற்கு தயாராக உள்ளேன் என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.


இதுகுறித்து ரியான் பராக் பேசுகையில், “எனது அணிக்காக இந்த வருடம் இரண்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளேன் ஆனால் அது மட்டும் போதாது, ஒருவேளை நான் இந்தத் தொடரில் 6 அல்லது 7 போட்டிகளில் எனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்திருந்தால் அதை நான் மகிழ்ச்சியாக தெரிவித்துக் கொள்ளலாம். ஆனால் அப்படி நடக்கவில்லை, தற்போதைய இந்திய அணியில் என்னுடைய பெயர் இடம் பெற்றிருந்தாலும் அது எனக்கு மகிழ்ச்சியைத் தராது, ஏனென்றால் தற்போதைய நிலைமையில் நான் அதற்குத் தகுதியானவன் கிடையாது, நிச்சயம் எதிர்வரும் தொடரில் நான் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன், மேலும் எனது அணிக்கு பல வெற்றிகளை பெற்று கொடுப்பேன்” என்றும் ரியான் பராக் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Mohamed:

This website uses cookies.