2018 ஆம் ஆண்டு கடைசியாக ஹர்திக் பாண்டியா மற்றும் புவனேஸ்வர் குமார் இருவரும் டெஸ்ட் அணியில் இடம் பெற்றிருந்தார்கள். அதற்கு பின்னர் காயம் காரணமாக இவர்களுக்கு இவர்கள் இருவரும் சுமார் மூன்று ஆண்டுகளாக இதுவரை எந்தவித டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணிக்காக விளையாட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இருவரும் மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பார்கள் அல்லது அப்படியே இடம் பிடிக்காமலேயே போய் விடுவார்களா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக ஆகாஷ் சோப்ரா தன்னுடைய விளக்கத்தை சமீபத்தில் கூறியிருக்கிறார்.
காயம் காரணமாகவே இவர்கள் இருவரும் அணியில் இடம்பெறவில்லை
2018 ஆம் ஆண்டு கடைசியாக இவர்கள் இருவரும் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடிய பின்னர் பல டெஸ்ட் போட்டிகளில் இவர்கள் இருவரும் இடம் பெறாமல் போனதற்கு இவர்களது உடல்நிலை மிக முக்கிய காரணமாக விளங்கியது என்று ஆகாஷ் சோப்ரா தற்போது கூறியிருக்கிறார்.
சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இவர்கள் இடம்பெறவில்லை. அதேபோல இங்கிலாந்துக்கு எதிராக நடக்க இருக்கின்ற டெஸ்ட் போட்டித் தொடரிலும் இவர்கள் இருவரும் விளையாட போவதில்லை. அதற்கு மிக முக்கிய காரணம் இவர்களது உடல் நிலைதான்.
ஹர்திக் பாண்டியாவால் முன்புபோல தற்பொழுது பந்து வீச முடியவில்லை. ஆல்ரவுண்டர் வீரரான அவர் மீண்டும் எப்பொழுது சீராக பந்து வீசுகிறாரோ அப்பொழுதுதான் டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பார் என்றும், அதேபோல புவனேஷ்வர் குமார் எப்பொழுது முழு உடல் தகுதியுடன் தயாராகிறாரோ அப்போது மீண்டும் இந்திய அணியில் நிச்சயமாக இடம் பெற்று டெஸ்ட் போட்டிகளில் பழையபடி விளையாடுவார் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் புவனேஸ்வர் குமார் நிச்சயமாக விளையாட வேண்டும்
பலரும் புவனேஸ்வர் குமார் டெஸ்ட் போட்டியில் இனி விளையாடமாட்டார் அவருக்கு டெஸ்ட் போட்டியில் விளையாட விருப்பம் இல்லை என்று கூறி வந்தனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நான் ஒருபோதும் அப்படி கூறியது கிடையாது என்று அவரே முன்வந்து பதிலளித்தார். ஐபிஎல் போட்டிகளில் கூட மிக சிறப்பாக பந்து வீசினார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரை இந்திய அணியில் சேர்த்து இருந்திருக்க வேண்டும்.
ஆனால் தற்பொழுது அவர் இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறார். இருப்பினும் அவர் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். நிச்சயமாக இனி அடுத்து வர இருக்கின்ற தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான சுற்றுப்பயணத்தில் நிச்சயமாக அவரிடம் பிடித்தாக வேண்டும். கடந்த முறை தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். மேலும் பேட்டிங்கில் மிக சிறப்பாக விளையாடி அற்புதமாக செயல்பட்டார்.
எனவே அவரது அனுபவம் மற்றும் திறமையை கணக்கில் எடுத்துக் கொண்டு நிச்சயமாக இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அவரை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட வைக்க வேண்டும் என்று தன்னுடைய வேண்டுகோளை ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தினார்.