இந்திய அணியுடனான கிரிக்கெட் தொடரின் போது, இந்திய கேப்டன் விராட் கோலியை எவ்வாறு சமாளிக்க முடியும் என்பது தற்போது வரை தெரியவரில்லை என இங்கிலாந்து வீரர் மொய்ன் அலி தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள், ஐந்து டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் துவங்கும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை மறுநாள், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியுடனான இந்த தொடர் குறித்து பேசியுள்ள இங்கிலாந்து அணியின் சீனியர் வீரரான மொய்ன் அலி, விராட் கோலியை எப்படி சமாளிக்க போகிறோம் என தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து மொய்ன் அலி பேசுகையில், “விராட் கோலி இப்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார். குழந்தை பிறந்த மகிழ்ச்சி, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது ஆகிய காரணங்களால் கோலி உற்சாகமாக இருப்பார். கோலிக்கு இந்திய ஆடுகளத்தில் எந்த பலவீனமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இதையெல்லாம் நினைக்கும் போது கோலியை எப்படி சமாளிக்கப் போகிறோம், எவ்வாறு ஆட்டமிழக்கச் செய்யப் போகிறோம் என தெரியவில்லை” என்றார்.
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி;
விராட் கோஹ்லி, ரஹானே, ரோஹித் சர்மா, புஜாரா, சுப்மன் கில், மாயன்க் அகர்வால், ஹர்திக் பாண்டியா, வாசிங்டன் சுந்தர், ரவிச்சந்திர அஸ்வின், அக்ஷர் பட்டேல், ரிஷப் பண்ட், விர்திமான் சஹா, கே.எல் ராகுல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர்.