இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்த அணி பெட்டிங் சீனியும் பொழுது தோனிக்கு செய்தி அனுப்பப்பட்டது. அது என்னவென்று தனக்கு தெரியாது என சஹால் கூறியுள்ளார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயேயான இரண்டாவது ஒருநாள் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடை பெற்றது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. ரூட் 113 ரன்களும், கேப்டன் மோர்கன் மற்றும் வில்லி அரைசதம் விளாசியதால் இங்கிலாந்து 50 ஓவர்களுக்கு 7 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் எடுத்தது.
சற்று சவாலான இலக்கை துரத்திய இந்திய அணி 49 ரன்கள் இருக்கையில் தவறான ஷாட் ஆடியதால் க்ளீன் போல்டு ஆகி வெளியேறினார். அதன்பின், ஷிகர் தவான் மற்றும் கே எல் ராகுல் இருவரும் அடுத்தடுத்து வெளியேறினர்.
அதன் பின் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரெய்னா மட்டும் கோஹ்லி நன்றாக ஆடினாலும், நிலைக்கவில்லை. 154/5 என இந்திய அணி தடுமாறிய நிலையில், தோனி மற்றும் ஹார்திக் பாண்டியா இருவரும் சற்று நேரம் நிலைத்து இருந்தனர்.
அதன்பின், ஹார்திக் பாண்டியாவும் சொதப்ப இந்திய அணி ஆட்டம் கண்டது. தோனி மட்டுமே நம்பிக்கை தரும் வகையில் அணியில் நிலைத்திருந்தார். 27வது ஓவர் களமிறங்கிய தோனி, 47வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
இவர் ஆட்டமிழப்பதற்கு ஒருப்பந்து முன்பு, தோனிக்கு ட்ரெஸ்ஸிங் ரூமிலிருந்து ஒரு செய்தி அனுப்பப்பட்டது. அதன்பின் ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்ப ஆரம்பித்துவிட்டனர்.
இதுகுறித்து சுழல்பந்துவீச்சாளர் சஹால் கூறுகையில், எனக்கு என்ன நடந்தது எண்பதுட தெரியாது. ஏனெனில், பயிற்சியாளர் தோனிக்கு கூறுகையில் நான் மைத்தனத்தில் இல்லை. அதனால் எனக்கு கூறிய விஷயம் எதுவும் தெரியாது என கூறினார்.