ப்ளீஸ்… சச்சின் கூட விராட் கோலியை கம்பேர் பன்னாதீங்க.. விராட் கோலி அவ்வளவு வொர்த் கிடையாது; முன்னாள் வீரர் சர்ச்சை பேச்சு !!

ப்ளீஸ்… சச்சின் கூட விராட் கோலியை கம்பேர் பன்னாதீங்க.. விராட் கோலி அவ்வளவு வொர்த் கிடையாது; முன்னாள் வீரர் சர்ச்சை பேச்சு

ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோலியை ஒப்பிட்டு பேசுவது ஏற்புடையது அல்ல என முன்னாள் இந்திய வீரரான ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து பேட்டிங்கில் மாஸ் காட்டி வரும் விராட் கோலி, ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணிக்கான தனது பங்களிப்பை மிக சரியாக செய்து பல்வேறு சாதனைகளையும் படைத்து வருகிறார்.

இதுவரை 48 அரைசதங்கள் அடித்துள்ள விராட் கோலி நடப்பு உலகக்கோப்பை தொடரிலேயே தனது 50வது சதத்தையும் பதிவு செய்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலியின் தற்போதைய பார்மை வைத்து பார்க்கையில் அவரால் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் அனைத்து சாதனைகளையும் அசால்டாக முறியடிக்க முடியும் என முன்னாள் வீரர்கள் பலர் பேசி வரும் நிலையில், முன்னாள் இந்திய வீரரான ஸ்ரீசாந்தோ சச்சின் டெண்டுல்கருடன், விராட் கோலியை ஒப்பிட்டு பேசுவது சரியல்ல என தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்ரீசாந்த் பேசுகையில், “சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோலியை ஒப்பிடுவதையே என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. விராட் கோலி சமகால கிரிக்கெட்டின்  தலைசிறந்த வீரர் என்பதில் எனக்கும் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடுவது சரியல்ல என்பதே எனது கருத்து. விராட் கோலி பேட்டிங்கில் பல்வேறு சாதனைகள் படைத்திருந்தாலும், சச்சின் டெண்டுல்கர் எதிர்கொண்ட திறமையான பந்துவீச்சாளர்களை விராட் கோலி எதிர்கொண்டது இல்லை என்பதே உண்மை. தற்போதைய பந்துவீச்சாளர்களும், சச்சின் விளையாடிய காலத்தில் இருந்து பந்துவீச்சாளர்களுக்கு அதிகமான வித்தியாசங்கள் உள்ளன. தரமான பந்துவீச்சாளர்கள் தற்போது இல்லை என்பதால் தான் ஐபிஎல் தொடரில் கூட தற்போதைய பேட்ஸ்மேன்களால் அதிகமான சதங்கள் அடிக்க முடிகிறது” என்றார்.

மேலும் பேசிய ஸ்ரீசாந்த்,  “கிளன் மேக்ராத், வாசிம் அக்ரம், சேன் வார்னே போன்ற சவாலான  பந்துவீச்சாளர்கள் தற்போது யாருமே இல்லை. சச்சின் டெண்டுல்கர் இப்போது விளையாடினால் விராட் கோலியை விட அதிகமான சதங்கள் அடித்து பல சாதனைகள் படைத்திருப்பார். அதே போல் சச்சின் டெண்டுல்கர் தொடர்ச்சியாக ஒரே பந்துவீச்சாளரின் பந்தில் விக்கெட்டை இழந்தது இல்லை, ஆனால் விராட் கோலி அப்படியல்ல. சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோலி மட்டும் இல்லை வேறு யாரை ஒப்பிட்டு பேசினாலும் என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.