ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு ஸ்மித், வார்னர் மட்டுமல்லாது இவரும் தலைவலி கொடுக்கக் கூடியவர் தான் என குறிப்பிட்டு பேசியுள்ளார் கே எல் ராகுல்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி வருகிற நவம்பர் 27ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. அதற்கு அடுத்ததாக டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுகின்றன.
கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஆஸ்திரேலிய அணியில் சிறந்த வீரர்களாக கருதப்படும் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் பந்தை சேதப்படுத்திய காரணத்திற்காக தடையில் இருந்தனர். அவர்கள் தற்போது மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல் அவர்கள் இருவரும் இல்லாத இந்த இடைப்பட்ட காலத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு மிகச் சிறந்த துவக்க வீரராக உருவெடுத்திருக்கிறார் மார்க்கஸ் லபுசானே. இந்திய அணிக்கு எதிரான தொடரில் இவரையும் இந்திய அணி சமாளிக்க தடுமாறும் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், தற்போது கேல் ராகுலும் இவர் குறித்த தனது கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.
அவர் கூறுகையில், கொரோனா வருவத்திற்கு முன்பாக நடந்த கிரிக்கெட் போட்டிகளில் சுமார் 14-15 மாதங்களாக தொடர்ந்து அதிக ரன்களைக் குவித்து பலரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் மார்க்கஸ். இவரை தெரியாதவர்கள் தற்போது யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இவரும் அச்சுறுத்தலாக இருப்பார். அவரை சமாளிக்க பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இருக்கின்றனர் இவர்கள் அத்தனை திட்டங்களையும் நிச்சயம் வைத்திருப்பர். இருப்பினும் இவர் இந்திய அணிக்கு தலைவலியாக அமைவார்.” என்றார்.
மர்கஸ் லபுச்சனே இதுவரை ஆடிய 14 டெஸ்ட் போட்டிகளில் கிட்டத்தட்ட 1500 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 1,100 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.