இந்த விஷயத்துல தான் தோனி கிங்குடா… கிரவுண்டுல மட்டும் கேப்டன்ஷிப் பண்றவன் கேப்டனாகிடவே முடியாது – முன்னாள் வீரர் தோனி பற்றி சொன்ன சீக்ரெட்!

‘மகேந்திர சிங் தோனியின் கேப்டன்ஷிப் அணுகுமுறை கிரவுண்டில் மட்டுமல்ல, அதற்கு வெளியேவும் இருக்கிறது. அங்குதான் அவர் வெற்றிகரமான கேப்டனாக மாறுகிறார்.’ என்று கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 சீசன்களில் 12 முறை பிளே-ஆப் சுற்றுக்கு வந்திருக்கிறது. அதில் பத்தாவது முறையாக பைனலுக்கும் முன்னேறியுள்ளது. வருகிற 28ஆம் தேதி நடைபெறும் பைனலுக்கு முதல் அணியாக காலடி எடுத்து வைத்துள்ளது. குஜராத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும் இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் வெற்றி பெறும் அணி, சிஎஸ்கே அணியை பைனலில் எதிர்கொள்ளும்.

சிஎஸ்கே அணி இவ்வளவு வெற்றிகரமாக செயல்பட்டு வருவதற்கு காரணம், அணியில் நிலவி வரும் சூழல் மற்றும் எந்தவித சூழலிலும் சிறப்பாக கேப்டன் பொறுப்பை செய்து வரும் தோனி என்று பேசியதோடு, டி20 கிரிக்கெட்டில் தோனி தான் தலைசிறந்த கேப்டன் என்றும் கூறியுள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன்.

“ஸ்டீபன் பிளம்மிங் உடன் சேர்ந்து மகேந்திர சிங் தோனி தான் ஒட்டுமொத்த அணியையும் முன்னின்று வழி நடத்துகிறார். எளிமையான வழிமுறைகளை கடைபிடித்து அணியில் நல்ல சூழல் நிலவுமாறு பார்த்துக் கொள்கிறார்கள். இதன் காரணமாக தொடர்ச்சியான செயல்பாட்டை வீரர்களிடமிருந்து பெறுகிறார்கள்.

ஒவ்வொரு போட்டியிலும் மகேந்திர சிங் தோனி சொல்வது ஒன்று மட்டுமே. “அதே அணியுடன் விளையாடுகிறோம்” என்பார். ஆகையால் வீரர்களிடம் இதனால் நம்பிக்கை பிறக்கும். ஒருமுறை நாம் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுவிட்டால் தொடர்ச்சியான வாய்ப்புகள் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் வீரர்களும் அழுத்தத்தை எடுத்துக்கொள்ளாமல் தங்களுடைய முழு செயல்பாட்டை வெளிப்படுத்துகிறார்கள். அணியின் கேப்டன் மற்றும் தலைமை பயிற்சியாளர் உங்கள் மீது நம்பிக்கை வைக்கும் பொழுது உங்களால் எப்படி எளிதில் தவறு செய்திட முடியும்.

நாம் மைதானத்தில் பார்ப்பது மட்டுமே தோனியின் கேப்டன்ஷிப் அல்ல. மைதானத்திற்கு வெளியேவும் தோனியின் கேப்டன்ஷிப் அடங்கியிருக்கிறது. உதாரணமாக தோனியின் கதவு 24 மணி நேரமும் 7 நாட்களும் திறந்திருக்கும். எந்த வீரரும் எப்போது வேண்டுமானாலும் அவரிடம் ஆலோசனைகள் கேட்கலாம். அந்த அளவிற்கு அணுகுமுறை தெளிவாக இருக்கிறது. வீரர்களுக்கு சுதந்திரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக சீனியர் ஜூனியர் என்கிற பாகுபாடு இல்லாத அணியில் தொடர்ச்சியான வெற்றிகளை பார்க்கலாம். அப்படித்தான் சிஎஸ்கே அணியிலும் நடக்கிறது.” என்று மைக்கேல் வாகன் கூறினார்.

Mohamed:

This website uses cookies.