ஆஸ்திரேலியாவில் ரன் அடிக்கலைனா பரவால்ல.. இதை மட்டும் பண்ணிட்டு வா; கோஹ்லிக்கு ஆர்டர் போட்ட கங்குலி!

ஆஸ்திரேலியாவில் ரன் அடிக்கலைனா பரவால்ல.. இதை மட்டும் பண்ணிட்டு வா; கோஹ்லிக்கு ஆர்டர் போட்ட கங்குலி!

ஆஸ்திரேலிய மண்ணில் விராட்கோலி ரன்கள் அடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை; இதனை மட்டும் செய்துவிட்டு வந்தால் போதும் என கங்குலி பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வருகிற டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்திய அணி கடந்த 2018ஆம் ஆண்டு சுற்றுப்பயணம் சென்றபோது 2-1 என கைப்பற்றியது.
ஆனால் சென்ற முறை போன்று இம்முறை டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றுவது எளிதானது அல்ல என கூறப்படுகிறது. காரணம், இம்முறை ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித், வார்னர் என இருவரும் இருக்கின்றனர். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரவ் கங்குலியும் இதனை தெரிவித்திருக்கிறார். 2018-ம் ஆண்டு தொடர்போல் எளிதாக இருக்காது என்று இந்திய கிரிக்கெட் அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சவுரவ் கங்குலி பேசுகையில், “ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் கடினமாக முன்புபோல இருக்காது. 2018-ல் இருந்ததைவிட தற்போதுள்ள அணி மிகவும் வலுவான அணியாக இருக்கிறது. அதைப்போல இந்திய அணியும் சிறந்த பேட்டிங் மற்றும் பந்துவீச்சை கொண்டுள்ளது .
விராட் கோலியின் பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப் மிகவும் உயர்ந்திருக்கிறது. விராட்கோலி விளையாட போகும்போதும், நான் அவர் மட்டும் நன்றாக ரன்கள் அடிக்கவேண்டும் என நினைக்கமாட்டேன். நான் அவரிடம் எதிர்பார்ப்பதெல்லாம் இந்திய அணியின் வெற்றியை மட்டும்தான். என்னை பொறுத்தவரைக்கும் இதுதான் மிகவும் முக்கியம்.
ஏனெனில், தனிப்பட்ட முறையில் விராட்கோலி சிறந்த வீரர் என உலகம் அறியும். ஆனால், அணியின் வெற்றியை பொறுத்து கேப்டன்ஷிப்பின் தரம் பேசப்படும்.  டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் மீண்டும் இந்திய அணி வெற்றிபெற்று எத்தகைய பலம் வாய்ந்தது என நிரூபிக்க வேண்டும். அதனைத்தான் நான் கோஹ்லியிடம் எதிர்பார்க்கிறேன்.” என்றார் கங்குலி.

Prabhu Soundar:

This website uses cookies.