எனக்கும் கோவம் நல்லாவே வரும்… ஆனா…! ரசிகர்களின் பட வருட கேள்விக்கு பதிலளித்த கேப்டன் கூல் தோனி!

எல்லோரையும் எனக்கும் கோபம் வரும். ஆனால் அதைக் கட்டுப்படுத்திக் கொள்வேன் என தோனி கூறியுள்ளார்.

ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு தோனி அளித்த பேட்டியில் கூறியதாவது:

நானும் எல்லோரையும் போலத்தான். ஆனால் மற்றவர்களை விடவும் என்னுடைய கோபத்தை நான் கட்டுப்படுத்திக்கொள்வேன். நானும் வெறுப்படைவேன். எனக்கும் கோபம் வரும், வருத்தப்படுவேன். ஆனால் இவற்றால் பயன் எதுவும் இருக்காது.

உணர்ச்சிகளை விடவும் பிரச்னைக்கான தீர்வைத் தேடுவது தான் முக்கியம். அடுத்து என்ன திட்டமிடலாம், யாரை அடுத்ததாகப் பயன்படுத்தலாம் என யோசிக்கும்போது என்னுடைய உணர்ச்சிகளை நல்ல முறையில் கட்டுப்படுத்துவேன் என்று கூறியுள்ளார்.

AUCKLAND, NEW ZEALAND – FEBRUARY 08: Rishabh Pant and MS Dhoni of India celebrate winning game two of the International T20 Series between the New Zealand Black Caps and India at Eden Park on February 08, 2019 in Auckland, New Zealand. (Photo by Hannah Peters/Getty Images)

சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு இரு மாதங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டார் தோனி. இதனால் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தில் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் தன்னுடைய விடுமுறையை நவம்பர் மாதம் வரை தோனி நீட்டித்துள்ளார். இதனால் விஜய் ஹசாரே கோப்பை, வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடர் ஆகிய போட்டிகளில் தோனி பங்கேற்கப் போவதில்லை என்று தெரிகிறது.

The veteran wicketkeeper-batsman has not played since the World Cup semifinal and is unlikely to return to action any time soon. He missed the series against West Indies, South Africa and has also reportedly made himself unavailable for the series against Bangladesh next month,

டிசம்பர் மாதம் இந்தியாவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20, மூன்று ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. இதனால் இந்தத் தொடரில்தான் அடுத்ததாக தோனி பங்கேற்பார் எனத் தெரிகிறது. கடைசியாக ஜூலை 10 அன்று நியூஸிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிச் சுற்றில் தோனி விளையாடினார். தற்போது அவர் ஆறு மாத ஓய்வுக்குப் பிறகு டிசம்பரில் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடவுள்ளார்.

Sathish Kumar:

This website uses cookies.