எதற்காக வதந்திகளை பரப்புகிறீர்கள் நான் இப்பொழுது ஓய்வு பெறப் போவதில்லை – ராஸ் டைலர் அதிரடி
37 வயதுடைய ராஸ் டைலர் இந்த வருடம் ஓய்வுபெறப் போகிறார் என்ற வதந்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்கு முன்னர் இதே போல் 2019ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ராஸ் டைலர் தன்னுடைய ஓய்வு பற்றிய அறிக்கையை வெளியிட இருக்கிறார் என்ற வதந்தி வந்தது. தற்பொழுது மீண்டும் அதே வதந்தி வந்து கொண்டிருக்கும் வேளையில் ராஸ் டைலர் தான் தற்போது ஓய்வு பெறப் போவதில்லை என்று விளக்கமளித்துள்ளார்.
வயது ஒரு காரணமே கிடையாது நான் நன்றாகத்தான் விளையாடுகிறேன்
இது குறித்து பேசியுள்ள நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ராஸ் டெய்லர், விளையாட்டில் வயது என்றுமே காரணமாக பார்ப்பது கிடையாது. நான் தற்போது நன்றாக தான் விளையாடிக் கொண்டிருக்கிறேன். என்னால் இன்னும் சில காலம் மிக அற்புதமாக விளையாட முடியும் என்று நம்புகிறேன். நன்றாக விளையாடி இன்னும் பல போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றிகளை வாங்கித்தர என்னால் முடியும் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
இதுவரை மொத்தமாக 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7380 ரன்களை குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இவரது அவெரேஜ் 45.28 ஆகும். மறுபக்கம் ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 200 333 போட்டிகளில் விளையாடி 8576 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் போட்டியில் இவருடைய பேட்டிங் அவரேஜ் 48.18ஆகும். மேலும் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் இவர்தான்.
நான் எப்போது சிரமப்படுகிறேனோ அப்பொழுது தான் ஓய்வு பெறுவேன்
தனது ஓய்வு குறித்து பேசியுள்ளார் ராஸ் டைலர், இப்பொழுது ஓய்வு பெறும் எண்ணம் தனக்கு இல்லை என்று கூறியுள்ளார். மேலும் தான் தற்போது சிரமப்படாமல் விளையாடி வருவதாகவும் கூறியுள்ளார். என்னைப் பொறுத்தவரையில் நான் இப்போது விளையாட சிரமப்படுகிறேனோ அப்பொழுது நான் ஓய்வு பெற்றுக் கொள்வேன். அதுவரை நியூசிலாந்து அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன் என்று கூறியுள்ளார்.
வருகிற ஜூன் 18ம் தேதி நடக்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எதிராக இவர் நிச்சயமாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து மைதானங்களில் இவரது டெஸ்ட் ஆவரேஜ் 40.23 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 66.88 என்பது குறிப்பிடத்தக்கது.