தேவைப்பட்டால் தினேஷ் கார்த்திக்கிடம் பேசுவேன் ; இந்த விஷயத்தில் சுந்தருக்கு சப்போர்ட் பண்ணும் ரவி சாஸ்திரி !

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் 4 டெஸ்ட், 5 டி20 மற்றும் 3 ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலில் நான்கு டெஸ்ட் போட்டிகள் பிப். 5-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இதில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருக்கிறது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருகிற 12-ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. 

இந்நிலையில்,  இந்திய அணியில் ஆல் ரவுண்டராக செயல்பட்டு வரும் தமிழக வீரர் வாசிங்டன் சுந்தர் தனது அதிரடி ஆட்டத்தை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி வருகிறார். சுந்தர் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை தொடர்ந்து இந்த இங்கிலாந்து தொடரிலும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் சுந்தர் 85 ரன்களும், இறுதி டெஸ்ட் போட்டியில் 96 ரன்களும் குவித்து இருக்கிறார். இறுதி டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் 96 ரன்கள் குவித்தார். அப்போது இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

அப்போது களமிறங்கிய இசாந்த் சர்மா மற்றும் சிராஜ் இருவரும் தங்களது விக்கெட்டுகளை வெறும் 4 பந்தில் இழந்தனர். இதனால் சுந்தர் 4 ரன்னில் தனது சதத்தை தவறவிட்டார்.  இருப்பினும் சுந்தரின் சிறப்பான ஆட்டத்திற்கு அனைவரும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி சுந்தர் குறித்து பேசியிருக்கிறார். அப்போது பேசிய ரவி சாஸ்திரி “ வாஷிங்டன் சுந்தரின் பேட்டிங் முன்னேறிக்கொண்டே இருக்கிறது. அவர் ஆஸ்திரேலியா தொடரை விட இந்த இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடி இருந்தார். இனிமேல் இந்திய அணியில் சுந்தர் 6வது வீரராக களமிறங்க வைப்போம்.

அவரது பேட்டிங் மேலும் முன்னேற்றம் அடைந்தால் அவரை டாப் ஆர்டரில் கூட ஆட வைக்க முயற்சி செய்வோம். தமிழ்நாடு அணிக்காக விளையாடி வரும் சுந்தர் இனிமேல்  நம்பர் 4ல் தான் விளையாட வேண்டும். அப்போதுதான் அவரது பேட்டிங் சிறப்பாக இருக்கும்.  இதுகுறித்து நான் தமிழ்நாடு அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்கிடம் பேசப்போகிறேன்” என்று ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.

Prabhu Soundar:

This website uses cookies.