இதனால் ஒன்பது நாட்கள் நான் சரியாக தூங்கவில்லை! ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கம்!

இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் வேறு பாதையில் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் ரயில் பங்கெடுத்து விளையாடிய வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா வந்த காரணத்தினால் ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிக்கை வெளியிட்டது.

பிசிசிஐ பாதியில் நிறுத்தி வைக்கப்படுவதற்கு முன்பாக டெல்லி அணியில் விளையாடி வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தனது குடும்பத்தில் இருந்த சிலருக்கு கொரோனா வந்த காரணத்தினால் அவர்களை நான் பார்க்க விரும்புகிறேன். எனவே ஐபிஎல் தொடரில் இருந்து வெளியே இருக்கிறேன் என்று கூறினார். தற்பொழுது ஏன் அவர் பாதியில் வெளியேறினார் என்பது குறித்து முழு விளக்கத்தை அளித்துள்ளார்.

என்னால் ஒன்பது நாட்கள் சரியாக தூங்க முடியவில்லை

எனது குடும்பத்தில் இருந்த ஒரு சிலருக்கு கொரோனா வந்த செய்தியை அறிந்தவுடன் மனதளவில் நிறைய விஷயங்களை யோசிக்க தொடங்கினேன். என்னால் அந்த செய்தியை கேட்டதில் இருந்து ஒன்பது நாட்களுக்கு சரியாக தூங்க முடியவில்லை. என்னால் அதற்கு மேல் கிரிக்கெட் விளையாட முடியவில்லை.

மேலும் ஐபிஎல் தொடரில் இருந்து பாதியில் வெளியேறிய நிலையில் தன்னுடைய மனநிலை, இதற்கு மேல் நம்மால் கிரிக்கெட் விளையாட முடியுமா என்ற கேள்வியுடன் அவர் வெளியேறியதாக கூறினார். ஆனால் தற்போதைய நினைத்து பார்க்கையில் அப்போது எடுத்த முடிவு சரிதான் என்றும் கூறியுள்ளார்.

பாதியில் வெளியேறியதற்கு மிக முக்கிய காரணம் அவரது குடும்பத்தில் இருந்த ஒரு சிலர் சீரியஸாக இருந்ததால், மேலும் அவர்கள் அப்படி இருக்க தன்னால் இங்கு இயல்பாக இருக்க முடியாத காரணத்தினாலும் வெளியேறியதாக கூறினார். மேலும் இறுதியாக தற்பொழுது தனது குடும்பத்தில் இருந்த அனைவரும் கொரோனோ பாதிப்பில் இருந்து நல்லபடியாக மீண்டும் விட்டனர் என்றும் அவர்கள் அனைவரும் தற்போது நலமாக உள்ளனர் என்று கூறியுள்ளார்.

Prabhu Soundar:

This website uses cookies.