அணிக்குத் திரும்ப அவ்வளவு கஸ்டப்பட்ட யோ மகேஷ்

2017/18 ஆம் ரஞ்சிக் கோப்பைப் தொடர் துவங்கும் முன், தமிழக அணியின் முதல் 30 பேரில் கூட இல்லை யோ மகேஷ். பின்னர் டி.என்.பி.எல் தொடடில் அவருடைய செயல்பாட்டைப் பார்த்து முதல் 15 பேரில் சேர்க்கப்பட்டார். ஆனால், 11 பேர் கோண்ட அணியில் முதல் இரண்டு போட்டிகளில் சேர்க்கப்டவவில்லை.

அவர் கடைசியாக தமிழக அணியில் ரஞ்சி கோப்பை போட்டிகளில் ஆடி 4 வருடங்கள் ஆகிறது. இந்த வருட ரஞ்சிக் கோப்பைத் தொடரின்  மும்பைக்கு எதிரான போட்டியில் இறக்கி விடப்பட்டார்  ஆல் ரவுண்டர் யோ மகேஷ்.

வலிமையான மும்பை அணியை எதிர்த்து யோ மகேஷ் 103* ரன் குவித்து 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.

அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையைப் பற்றி அவர் கூறியதாவது,

இந்த 4 வருடங்கள் நன்றாக சென்றது. ஆனால், நிறைய கற்றுக்கொண்டேன். 4 வருசன் காயத்தால் விளையாட முடியாதது மனதிற்கு வருத்தமாகவே இருந்தது. தற்போது மீண்டும் தமிழக அணிக்கு விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், தற்போது நன்றாக விளையாடியது சற்று கூடுதாலான மகிழ்ச்சியாக உள்ளது.

நான் என்னுடைய 4 வருட கிரிக்கெட் வாழ்க்கையை இழந்து விட்டேன். ஆனால், அதில் கற்றுக் கொண்டவைகள் ஏறாலம். கிரிக்கெட் வாழ்க்கையிலும் சரி தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி.

கிரிக்கெட் தான் எனக்கு எல்லாம். எனது அறுவை சிகிச்சைக்காக நான் என்னுடைய பல வேலைகலில் இருந்து பணத்தை சேமித்து வைத்தேன். எனக்கு பிடித்த ஒன்றை செய்ய நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டேன்.

எனக் கூறினார் யோ மகேஷ்.

இந்த போட்டியில் 9ஆவது விக்கெட்டிற்கு இறங்கிய யோ மகேஷ் வலிமையான மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சினை எதிர்கொண்டு சதம் அடித்து தமிழக அணிக்கு லீட் எடுத்து கொடுத்தார். முன்னதாக சதம் அடித்து அசத்டினார் மும்பை அணியின் ஷ்ரேயாஸ் அய்யர்.

போட்டி ட்ராவில் முடிந்தாதால் இரு அணிகளுக்கும் தலா 3 புள்ளிகள் கொடுக்கப்பட்டது. முன்னதாக, ஒரு போட்டியில் துவக்க ஆட்டக்காரர் அபினவ் முகுந்த் அணிக்கு வெளியே உக்கார வைக்கப்பட்டார். தற்போது சதம் அடித்துள்ள யோ மகேஷ் அடுத்தப் போட்டிக்கும் தேர்வு செய்யப்படுவார்.

தமிழக அணிக்காக அடுத்த போட்டி, நவம்பர் 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை ஒடிஷா அணியை எதிர்த்து விளையாடுகிறது.

Editor:

This website uses cookies.