வீட்டில் கொரோனா! தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்ட கம்பீர்!
உலகம் முழுவதும் கொரோனவைரஸ் தற்போதுவரை தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் இரண்டாம் கொரோனா அலை வீசப் போகிறது என்று இரண்டாவது முறை லாக்டவுன் போட திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் அனைத்து தளவுர்களும் விடுவிக்கப்பட்டு விட்டது . இதன் காரணமாக மக்களும் இயல்பு வாழ்க்கையை தொடங்க ஆரம்பித்துவிட்டனர். இருந்தாலும் நாளுக்கு நாள் இந்த வைரஸ் தொற்று அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.
யாருக்கு கொரோனா வைரஸ் இருக்கும் என்று கூட தெரியவில்லை. இந்தியாவில் பல லட்சம் பேருக்கு இந்த கொரோனா வைரஸ் இருக்கிறது. யார் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வெளியே சென்றாலும் இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் என் வீட்டில் கொரோனா வைரஸ் வந்துவிட்டது. அவரது வீட்டில் ஒருவருக்கு வைரஸ் இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவரே உறுதி செய்துள்ளார்.
இதன் காரணமாக தன்னை தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவித்திருக்கிறார் கம்பீர். மேலும், தனது டெஸ்ட் ரிசல்டுக்கும் காத்துக் கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார். அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். கௌதம் கம்பீர் இந்திய அணிக்காக 2004 ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை 58 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய மேலும் 2003 முதல் 2013-ம் ஆண்டுவரை 147 ஒருநாள் போட்டிகளில் ஆடி இருக்கிறார்.
37 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடியிருக்கிறார் .டெஸ்ட் போட்டிகளில் 4,154 ரன்கள் ஒருநாள் போட்டிகளில் 5738 ரன்களும் டி20 போட்டிகளில் 932 ரன்கள் அடித்திருக்கிறார் ஐபிஎல் போட்டிகளிலும் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக இருந்தபோது இரண்டு கோப்பைகளை வென்று கொடுத்திருக்கிறார் 152 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 4217 ரன்கள் அடித்திருக்கிறார்.