விராட் கோலி விக்கெட்லாம் எனக்கு மேட்டரே இல்ல ; தேவையில்லாமல் சீண்டிய வங்கதேச பந்துவீ்சாளர் !!

விராட் கோலி விக்கெட்லாம் எனக்கு மேட்டரே இல்ல ; தேவையில்லாமல் சீண்டிய வங்கதேச பந்துவீ்சாளர்..

விராட் கோலியின் விக்கெட்டை எடுத்தது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை என்று பங்களாதேஷ் அணியின் சுழற் பந்துவீச்சாளர் தைஜுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இதில் முதல் டெஸ்ட் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 10விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்து அசத்தியது, இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக புஜாரா(90), ஷ்ரேயாஸ் ஐயர் (86), அஸ்வின்(54) ரன்களை எடுத்திருந்தனர்.

பங்களாதேஷ் அணி சார்பில் தைஜுல் இஸ்லாம் மற்றும் மெஹ்தி ஹசன் தலா 4 விக்கெட்களும்,ஹுசைன் மற்றும் கலீல் அஹமத் தலா 1விக்கெட்களை எடுத்திருந்தனர்.

இதன் பிறகு தன்னுடைய முதல் இன்னிங்சை விளையாடிய பங்களாதேஷ் அணி இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 10 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.இதனால் இந்திய அணி 254 ரன்கள் முன்னிலையில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.

விராட் கோலியின் விக்கெட் வீழ்த்தியது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை..

இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் சுப்மன் கில்,விராட் கோலி மற்றும் புஜாரா ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்திய பங்களாதேஷ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் தைஜுல் இஸ்லாம், விராட் கோலியின் விக்கெட்டை எடுத்ததைவிட புஜாராவின் விக்கெட்டை எடுத்ததுதான் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

 

அந்த பேட்டியில்,“நான் என் கிரிக்கெட் கரியரின் ஆரம்பத்திலேயே விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளேன், இதனால் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியது எனக்கு பெரிதாக தெரியவில்லை, ஆனால் புஜாராவின் விக்கெட்டை வீழ்த்தியது எனக்கு மிகவும் விருப்பமான ஒன்றாக உள்ளது, ஏனென்றால் அந்த பந்து சரியான லைன் மற்றும் லென்த்தில் இருந்தது, இதை புஜாரா கணிக்க தவறிவிட்டார். மேலும் பந்து துல்லியமாக டார்ன் ஆகி ஸ்டம்பில் பட்டது, ஆனால் அதை புஜாரா நேராக வந்தது என நினைத்துக் கொண்டிருந்தார்”என்று தைஜுல் இஸ்லாம் தெரிவித்திருந்தார்.

Mohamed:

This website uses cookies.