சேவாக் 2016ல் பேசியதற்கு 2020ல் பதில் கொடுத்த அக்தர்! என்ன பிரச்சனை!

இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றாலே அனல் பறக்கும். அதிலும் அக்தர் அதிவேகத்தில் வீச, அதை சேவாக் அடித்து பறக்கவிட, என போட்டி கடுமையாக இருக்கும். அவர்கள் ஆடிய காலத்தில் களத்தில் மோதிக்கொண்டாலும் களத்திற்கு வெளியே இந்தியா – பாகிஸ்தான் அணிகளின் பெரும்பாலான வீரர்கள் நல்ல உறவில் தான் இருந்தனர்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், அக்தர் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி, கிரிக்கெட் தொடர்பாகவும் வீரர்கள் தொடர்பாகவும் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டுவருகிறார். அதிலும் இந்திய வீரர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட்டை அதிகமாக மையப்படுத்தி அவர் வீடியோ வெளியிடுவதால், அந்த வீடியோக்களில் அவர் பேசுவது இந்திய ஊடகங்களில் தலைப்பு செய்தியாகிறது.

இதுகுறித்து கடந்த 2016ம் ஆண்டு  கருத்து தெரிவித்த சேவாக், அக்தர் எங்களுக்கெல்லாம் நல்ல நண்பர் தான். ஆனால் அவர் ஆடிய காலங்களில் எங்களை பற்றி பெருமையாக பேசவில்லை. இப்போது அவரது தொழில்(யூடியூப் பக்கத்திற்கு அதிக பார்வையாளர்களை பெறுவதற்காக) இந்தியாவில் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக எங்களை புகழ்கிறார் என்று தெரிவித்திருந்தார்.

Indian cricketer Virat Kohli (R) and Virender Sehwag (L) run between the wickets during the opening one-day international (ODI) match between Sri Lanka and India at the Suriyawewa Mahinda Rajapakse International Cricket Stadium in the southern district of Hambantota on July 21, 2012. AFP PHOTO/Ishara S. KODIKARA (Photo credit should read Ishara S.KODIKARA/AFP/GettyImages)

இந்நிலையில், 4 ஆண்டுகள் கழித்து சேவாக்கின் கருத்துக்கு நக்கலாக பதிலடி கொடுத்துள்ளார் அக்தர். இதுகுறித்து பேசியுள்ள அக்தர், சேவாக், உங்களுடைய தலையில் இருக்கும் முடியை விட என்னிடம் அதிகமான பணம் இருக்கிறது என்று கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார்.

 

சேவாக் கூறிய இந்த கருத்து, சேவாக்குடையது மட்டுமல்ல. விவரம் தெரிந்த அனைவருக்குமே அப்பட்டமாக தெரியும். அக்தர், இந்திய ரசிகர்களையும் பார்வையாளர்களையும் தனது யூடியூப் பக்கத்தை நோக்கி கவர்வதற்காகவே இப்படி பேசுகிறார்.

Sathish Kumar:

This website uses cookies.