ஜோகன்னஸ்பர்க் ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கூறினார்.
ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் கடைசி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 187 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது நாளில் பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் தென்னாப்பிரிக்க அணி 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஆம்லா 61 ரன்களும், பிலாண்டர் 35 ரன்களும் எடுத்தனர். ரபடா 30 ரன்கள் எடுத்தார். பும்ரா 5 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 7 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி, இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்துள்ளது. பார்த்திவ் படேல் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முரளி விஜய் 13 ரன்களுடனும், ராகுல் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதுபற்றி பும்ரா கூறும்போது, ‘டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக 5 விக்கெட் எடுத்தது பற்றி கேட்கிறார்கள். நான் சீனியர் வீரர்களிடம் பேசும்போது, அவர்களின் ஆலோசனைகளை கேட்பேன். அப்படி கேட்டுக் கற்றுக்கொண்டது அதிகம். அதை வைத்தே பந்துவீசினேன். இதுபோன்ற பிட்ச்-களில் இதற்கு முன் ஆடியதில்லை. இந்த பிட்ச் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. சரியான இடத்தில் பந்துவீசினால் விக்கெட் கிடைக்கும் என்று நம்பினேன்.