ஓய்வு எப்போது…? மவுனம் கலைத்த இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் !!

இங்கிலாந்து அணியின் அனுபவம் வாய்ந்த நட்சத்திரப் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது ஓய்வு குறித்து பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் பொழுது பேசியுள்ளார்.

நடைபெற்றுவரும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் முதல் மூன்று போட்டிகள் முடிவுற்று இருக்கிறது. இதில் மூன்று போட்டியிலும் இங்கிலாந்து அணி படுமோசமாக தோல்வியுற்று ஆஷஸ் தொடரையும் இழந்திருக்கிறது.


பிரிஸ்பேன் டெஸ்ட் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இன்னும் மோசமாக 275 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த இரண்டு போட்டிகளிலும் செய்த அதே தவறை மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் செய்ததால், இன்னிங்ஸ் மற்றும் 14 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியுற்று இருக்கிறது இங்கிலாந்து அணி. இதன் மூலம் 3-0 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரையும் இழந்திருக்கிறது.

இந்த நிலையில் நாலாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது இதில் முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி 123 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது, இதில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் வுட் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்திய அசத்தியுள்ளனர்.

ஏற்கனவே இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் 3-0 என தொடரை இழந்ததால் அது சம்பந்தமான செய்திகள் பரவலாக பேசப்பட்டு வருகிறது, மேலும் சீனியர் வீரர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் இந்த ஆஷஸ் தொடரோடு தனது ஓய்வு அறிவிப்பார்கள் என்ற செய்தியும் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் பேசியதாவது, “ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணியில் நானும் இடம் பெற்றுள்ளேன், தோல்வியை சந்தித்தால் அது சம்பந்தமான விமர்சனங்கள் பேசப்பட்டு வருவது வழக்கம்தான், ஆனால் இந்த தோல்வி மீண்டும் மீண்டும் நடைபெறும் என்பது கிடையாது எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

மேலும் தனது ஓய்வு குறித்து பேசிய ஜேம்ஸ் ஆண்டர்சன், இங்கிலாந்து அணியின் சீனியர் வீரர்களும் கேப்டனும் நான் ஓய்வு அறிவிப்பதை விரும்பவில்லை, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை இழந்து இக்காட்டான நிலையில் இருந்தாலும் என்னுடைய பந்துவீச்சு தற்பொழுதும் சிறப்பாகவே உள்ளது, இதன் காரணமாக நான் இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவேன், மேலும் ஓய்வு குறித்து இங்கிலாந்து அணியின் மற்றுமொரு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டிடம் பேசினேன், அவரும் இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார் என்பதை தெரிவித்தார் என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Mohamed:

This website uses cookies.