நான் விளையாடியதில் சென்னை சூப்பர் கிங்ஸ் தான் அபாரமான சிறந்த அணி!!
நான் விளையாடியதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் மிகவும் சிறந்த அணி என்று வெயின் பிராவோ புகழாரம் சூட்டியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வெயின் பிராவோ. இவர் ஏறக்குறைய உலகின் அனைத்து டி20 லீக் தொடரில் விளையாடியுள்ளார். ஆனால், தான் விளையாடியதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் சிறந்த என்று பிராவோ தெரிவித்துள்ளார்.
I’m happy, blessed and honoured to be retained by the Chennai Super Kings. I’m very happy and excited to be back in Yellow. To all our CSK fans eagerly waiting… this IPL we are back!” stated Bravo according to CSK’s official website.
சென்னை சூப்பர் கிங்ஸ் ஆர்டிஎம் மூலம் வெயின் பிராவோவை தக்க வைத்துள்ளது. மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கும் வெயின் பிராவோ கூறுகையில் ‘‘நான் விளையாடியதில் சிஎஸ்கே தான் சிறந்த அணி. எங்களுடைய கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா, ஜடேஜா மற்றும் புது வீரர்களை சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.
Chennai Super Kings bowler Dwayne Bravo eyes the ball during the IPL Twenty20 cricket final match between Chennai Super Kings (CSK) and Kolkata Knight Riders (KKR) at the M.A. Chidambaram Stadium in Chennai on May 27, 2012. RESTRICTED TO EDITORIAL USE. MOBILE USE WITHIN NEWS PACKAGE. AFP PHOTO/Manjunath KIRAN (Photo credit should read Manjunath Kiran/AFP/GettyImages)
நான் மும்பை அணியில் விளையாடும்போது என்னுடன் விளையாடிய ஹர்பஜன் சிங், அம்பதி ராயுடு மஞ்சள் ஜெர்சி அணிய இருக்கிறார்கள். என்னால் காத்திருக்க முடியாது. சென்னை அணி என்னை தக்கவைத்தது மகிழ்ச்சி. அதனால் பெருமையடைகிறேன்’’ என்றார்.