இந்த தடவையும் நாங்க தான் சாம்பியன்; ரோஹித் சர்மா நம்பிக்கை !!

இந்த தடவையும் நாங்க தான் சாம்பியன்; ரோஹித் சர்மா நம்பிக்கை

ஐ.பி.எல் கோப்பையை இந்த முறையும் கைப்பற்ற மும்பை வீரர்கள் பாடுபடுவார்கள் என மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உளூர் டி.20 கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் இதுவரை 12 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 13வது சீசன் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் துவங்க உள்ளது.

இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்து கொண்டன.

இதில் வழக்கம் போல் கோடிகளை கொட்டி கவுட்டர் நைல், கிரிஸ் லின் போன்ற வீரர்களை சீனியர் வீரர்களை தனது அணியில் எடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி அதே போல் அண்டர் 19 பிரிவில் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் பலரையும் ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்த நிலையில் அடுத்த ஐ.பி.எல் தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, இந்த முறையும் கோப்பையை வெல்ல மும்பை வீரர்கள் பாடுபடுவார்கள் என உறுதிபட தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரோஹித் சர்மா கூறியதாவது;

வழக்கம் போல் இந்த முறையும் எங்களது அணி போதிய பலம் வாய்ந்த அணியாக உள்ளது. இளம் வீரர்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்புகிறேன். இந்த முறையும் கோப்பை எங்களுக்கு தான் என்று நான் சொல்லவில்லை, ஆனால் இந்த முறையும் கோப்பையை வெல்ல எங்கள் வீரர்கள் தங்களது முழு பங்களிப்பையும் செலுத்துவார்கள் என்று முழுமையாக நம்புகிறேன். கடந்த தொடர்களை போலவே இந்த தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்” என்றார்.

Mohamed:

This website uses cookies.