இந்திய வீரர்கள் என்றாவது ஒரு நாள் எங்கள் டி20 லீக்கில் ஆடுவார்கள் : ஹரூன் லார்கட்

இந்தியா வீரர்கள் என்றாவது ஒரு நாள் எங்கள் டி20 லீக்கில் ஆடுவார்கள்

தென்னாப்பிரிக்கவின் வரும் அக்டோபர் மாதம் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் டி20 லீக் தொடர் நடக்கவுள்ளது. இதற்ககாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் பலமான ஏற்ப்பாடுகளை செய்து வருகிறது. 13 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இந்த டி20 லீக் தொடரில் கலந்து கொள்ளப்போகின்றனர். இந்தியா வீரர்கள் என்றாவது ஒரு நாள் எங்கள் டி20 லீக்கில் ஆடுவார்கள் என ஹரூன் லார்கட் கூறியுள்ளார்.

இத்தொடரில் பங்குபெறும் அணிகள் மற்றும் பங்குதார்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வளவு நாட்டு வீரர்கள் கலந்து கொண்டாலும் இந்திய வீரர்கள் கலந்து கொள்ளாதது வருத்தம் அளிப்பதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தலைவர் ஹரூன் லார்கட் கூறியுள்ளார்.

பல நாட்டு வீரர்கள் எங்கள் லீக்கில் கலந்து கொள்வது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய வீரர்கள் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மொதம் 13 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் எங்களுடைய லீக்கில் கலந்து கொண்டு விளையாடப் போகின்றனர். இன்றில்லை என்றாலும் ஒரு என்றாவது ஒரு நாள் எங்களுடைய டி20 லீக்கில் இந்தியர்கள் ஆடுவார்கள் என நம்பிக்கை கொள்கிறேன்.

இந்திய வீரர்கள் இல்லையென்றாலும் இந்தியர்களின் பங்கு இந்த தென்னாப்பிரிக்க லீக்கில் இருக்கிறது. ஆம், டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பங்குதாரர் நிறுவனமான ஜி.எம்.ஆர் ஜோகன்ஸ்பர்க் அணியையும் கொல்கத்தா அணியின் உரிமையாளர் நடிகர் சாருக் கான் கேப் டவுன் அனியயும் உரிமையாக்கியுள்ளனர்.

Editor:

This website uses cookies.